Last Updated : 12 May, 2021 09:14 PM

 

Published : 12 May 2021 09:14 PM
Last Updated : 12 May 2021 09:14 PM

மதுரையில் 11 இடங்களில் ஆதரவற்றோர் முகாம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

மதுரை

மதுரையில் 11 இடங்களில் ஆதரவற்றோர்களுக்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கரோனா 2ம் அலை பரவல் காரணமாக முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மதுரை மாட்டுதாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்கள், காந்தி மியூசியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி திரியும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

இவர்களுக்கும், இவர்களால் மற்றவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, மதுரையில் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி, உணவு, குடிநீர், தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.கிருஷ்வள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் வாதிட்டனர்.

மதுரை மாநகராட்சி சார்பில், மதுரையில் ஆதரவற்றோர்களுக்காக 11 இடங்களில் முகாம்கள் திறக்கப்பட்டுள்ள எனத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x