Last Updated : 12 May, 2021 07:34 PM

 

Published : 12 May 2021 07:34 PM
Last Updated : 12 May 2021 07:34 PM

மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராமநாதபுரம் மாணவர் புகார் கடிதம்

கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதசம்பரம், திருநாவுக்கரசு, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மாணவர் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அரிகரசுதன்.

இவர் சிதம்பரத்திலுள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சொந்தமான காமராசர் மரையன் சயின்ஸ், டெக்னாலஜி கல்லூரியில் 2019ல் டிப்ளமோ (6 மாதம்) படித்தார்.

இந்நிலையில் அவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதசம்பரம், திருநாவுக்கரசு , மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

பெற்றோர் தினக்கூலி வேலை செய்யும் சூழலில் உங்களது கல்லூரியில் படித்தேன். கல்லூரியில் சரியான கட்டமைப்பு வசதியில்லை என, மும்பையிலுள்ள கப்பல்துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உரிமத்தை ரத்து செய்தது.

அதன் பின்பும் என்னைப் போன்ற ஏழை மாணவர்களை அனுமதித்து, பணம் வாங்கிக் கொண்டு செல்லாத சான்றிதழ்களை வழங்கினீர்கள். அனுமதி ரத்தை எதிர்த்து நீங்கள் நீதிமன்றம் சென்றபோது, சான்றிதழ் செல்லாத நிலையில், மாணவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தில் 50 சதவீதத்தை திருப்பி வழங்க உத்தரவிட்டும் இதுவரை தரவில்லை.

எனது தந்தை புற்றுநோயால் அவதிப்படுகிறார். தயார் தினக்கூலிக்கு சென்று குடும்பத்தைக் கவனிக்கிறார். டிப்ளமோ படித்தும் வேலைக்கு போக முடியவில்லை.

என்னைப் போன்று பலர் பாதித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுபடி வேறு கல்லூரியில் படிக்க உதவி செய்வதோடு, நாங்கள் செலுத்திய 50 சதவீத கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் எம்பிக்களான நீங்களும் ஊழலுக்கு குரல் கொடுக்கும் ராகுல் காந்தியிடம் இத்தகவலை தெரிவித்து எங்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யுங்கள்.

இவ்வாறு அந்த மாணவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x