Last Updated : 19 Apr, 2021 08:27 AM

 

Published : 19 Apr 2021 08:27 AM
Last Updated : 19 Apr 2021 08:27 AM

பிஹார் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மேவாலால் சவுத்ரி கரோனா தொற்றுக்கு பலி

பிஹார் முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான மேவாலால் சவுத்ரி கரோனா தொற்று காரணமாக பலியாகினார்.

மேவாலால் சவுத்ரிக்கு கடந்த வாரம் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பிஹார் மாநிலம் தாராபூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான மேவாலால் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் அன்றாடம் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. ஒரு நாள் பாதிப்பு 2.61 லட்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

பிஹாரில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 39,498 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிஹாரில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மே 15ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் எவ்வித தேர்வுகளும் நடத்தப்படாது என பிஹார் அரசு அறிவித்துள்ளது.

முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்:

மேவாலால் சவுத்ரியின் மறைவுக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்னாரது மறைவு வருத்தமளிக்கிறது. கல்வித்துறையிலும் அரசியலிலும் ஈடு செய்ய முடியாது இழப்பு என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மேவாலாலின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x