Published : 03 Apr 2021 02:29 PM
Last Updated : 03 Apr 2021 02:29 PM

எடப்பாடி பழனிசாமி உங்கள் வீட்டுப் பிள்ளை: முதல்வருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த நடிகை நமீதா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உங்கள் வீட்டுப் பிள்ளை என்று கூறி முதல்வருக்கு ஆதரவாக எடப்பாடி தொகுதியில் நடிகை நமீதா வாக்குச் சேகரித்தார்.

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நடிகையும், பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினருமான நமீதா நேற்று இரவு திறந்த வாகனத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது, ''முதல்வர் எடப்பாடி பழனிசாமி உங்கள் வீட்டுப் பிள்ளை. மக்களால் உருவான முதல்வர் அவர். தொகுதியில் சிப்காட் தொழிற்சாலை மற்றும் கல்லூரிகளை ஏற்படுத்தித் தந்தவர். சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் தொடங்கி இன்று முதல்வராக இருக்கும் அவரின் வளர்ச்சியில் நீங்கள் (எடப்பாடி தொகுதி மக்கள்) அனைவரும் துணை நிற்கிறீர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறம்பட நிறைவேற்றி வருகிறார். அவருக்கு நீங்கள் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்தால் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களின் வீடு தேடி வரும்'' என்று நடிகை நமீதா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x