Published : 22 Mar 2021 01:42 PM
Last Updated : 22 Mar 2021 01:42 PM

தமிழக உரிமைகளுக்காக டெல்லி சென்று கர்ஜிப்பேன்: கமல்ஹாசன் உறுதி

தமிழக உரிமைகளுக்காக டெல்லி சென்று கர்ஜிப்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புலியகுளம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நேற்று கமல் பேசும்போது, “எங்கள் ஆட்சியில் ரூ.70- 80 லட்சம் கோடி தமிழகப் பொருளாதாரத்தை வளர்ப்பது லட்சியம். 70 லட்சம் கோடி பொருளாதாரம் என்பது தற்போது இருப்பதைவிட நான்கு மடங்கு அதிகம். குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.

நீட் தேர்வுக்கு சரியான பலத்தைப் பெற்றுவிட்டால் அதனை ரத்து செய்யலாம். ஆனால், அதற்கு நேரமாகும். எங்கள் கல்வியை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்பதற்கு தைரியமாகக் குரல் கொடுக்க நீங்கள்தான் எனக்கு வெற்றியைக் கொடுக்க வேண்டும். ஆதரவற்ற மாணவர்களின் கல்விப் பொறுப்பை அரசு ஏற்கும்.

உங்கள் வெற்றியை வைத்துக்கொண்டு செங்கோலை வைத்து நான் போட்டோவுக்கு போஸ் கொடுக்க மாட்டேன். தமிழக உரிமைகளுக்காக டெல்லிக்குச் சென்று கர்ஜிப்பேன்.

கிராமங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க மக்கள் கேண்டீன் என்பது புதிய திட்டம். ஆதரவற்ற மாணவர்களின் கல்விப் பொறுப்பை அரசே ஏற்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x