Published : 05 Mar 2021 13:09 pm

Updated : 06 Mar 2021 11:25 am

 

Published : 05 Mar 2021 01:09 PM
Last Updated : 06 Mar 2021 11:25 AM

தொடர்ந்து இறங்கும் தங்கம் விலை; ரூ.33,500-க்கும் கீழ் குறைந்தது

gold-prices-continue-to-fall-less-than-rs-33-500-what-is-the-reason

தங்கம் விலை இன்றும் கணிசமாக வீழ்ச்சி அடைந்து, பவுனுக்கு 288 ரூபாய் குறைந்து விற்பனை ஆகிறது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.


இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

வரி குறைப்பு

இதற்கிடையே 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.4,181-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.288 குறைந்து ரூ.33,448-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.36,576-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் குறைந்து 70 ரூபாய்க்கும் கீழே சென்றுள்ளது. 1 கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ.69.80க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.69,800 ஆக உள்ளது.

தவறவிடாதீர்!



தங்கம் விலைரூ.33500என்ன காரணம்Gold pricesReasonதங்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x