பிறவி இதயக் குறைபாடு உள்ள 50 குழந்தைகளுக்கு தோல் வழியாக ஃபோன்டன் சிகிச்சை - அப்போலோ குழந்​தைகள் மருத்துவமனை உலக சாதனை

பிறவி இதயக் குறைபாடு உள்ள 50 குழந்தைகளுக்கு தோல் வழியாக ஃபோன்டன் சிகிச்சை - அப்போலோ குழந்​தைகள் மருத்துவமனை உலக சாதனை
Updated on: 
1 min read

சென்னை: பிறவி இதயக் குறை​பாடு உள்ள 50 குழந்​தைகளுக்கு திறந்​தநிலை இதய அறு​வை சிகிச்​சைக்கு மாற்​றாக தோல் வழியாக ஃபோன்​டன் சிகிச்சை செய்து அப்​போலோ குழந்​தைகள் மருத்​து​வ​மனை உலக சாதனை படைத்​துள்​ளது.

உடலில் இரத்த ஓட்​டத்​தைப் பராமரிக்க ஒரே ஒரு இதய கீழறை மட்​டுமே செயல்​படும் சிக்​கலான இதயக் குறை​பாடு​களு​டன் சில குழந்​தைகள் பிறக்​கின்​றன. இக்​குழந்​தைகளுக்கு வழக்​க​மான திறந்​த நிலை இதய ஃபோன்​டன் அறு​வைசிகிச்​சைக்கு மாற்​றாக கதீட்​டர் அடிப்​படையி​லான அணுகுமுறையைப் பயன்​படுத்தி 50 குழந்​தைகளுக்கு தோல் வழி​யாக பெர்​குடேனியஸ் ஃபோன்​டன் சிகிச்சை அளித்து அப்​போலோ குழந்​தைகள் மருத்​து​வ​மனை உலகள​வில் புதிய மைல்​கல்லை எட்​டி​யுள்​ளது.

இது உடலின் கீழ்ப்​பகு​தியி​லிருந்து திரும்​பும் இரத்​தத்தை நேரடியாக நுரை​யீரலுக்கு திருப்பி விடு​கிறது, இதன் மூலம் அந்த ஒற்றை இதயக் கீழறை ஆக்​ஸிஜன் செறி​வான இரத்​தத்தை உடல் முழு​வதும் செலுத்​துகிறது. அப்​போலோ​வின் குழந்​தைகளுக்​கான இதய​வியல் மற்​றும் இதய அறு​வை சிகிச்சை மருத்​து​வக் குழுவினரால் உரு​வாக்​கப்​பட்டு மேம்​படுத்​தப்​பட்ட இந்த தொழில்நுட்​பம், முன்​ன​தாக எந்​தவொரு அறு​வை சிகிச்சை ஏற்பாடு​களும் இன்​றி, அறு​வை சிகிச்​சை​யின் போது ரத்த நாளங்கள் வழி​யாக கதீட்​டர்​கள், வயர்​கள் மற்​றும் ஸ்டென்ட்களைப் பயன்​படுத்தி ஃபோன்​டன் வழி​முறையை முழுமை​யாகச் செய்து முடிக்க உதவு​கிறது.

இதுகுறித்து குழந்​தைகளுக்​கான இதய​வியல் துறைத் தலை​வர் டாக்​டர் சி.எஸ்​.​முத்​துகுமரன் கூறுகை​யில், “ஒற்றை இதயக் கீழறை நோயுள்ள குழந்​தைகளுக்கு ஃபோன்​டன் கட்​டத்துக்கு முன்பே பல பெரிய இதய அறு​வை சிகிச்​சைகள் செய்ய வேண்டியுள்​ளது. உடற்​கூறியலும், இரத்த இயக்​க​வியலும் பொருத்த​மாக இருக்​கு​மா​னால், கதீட்​டர் அடிப்​படையி​லான இச்செயல்​முறை மற்​றொரு திறந்​த நிலை அறு​வை சிகிச்சை இல்லாமலேயே ஃபோன்​டன் வழி​முறையைச் செய்ய வழிவகுக்கிறது. பெரிய இதய சிகிச்​சைக்கு உட்​பட்ட குழந்​தைக்கு மற்​றொரு அறு​வை சிகிச்​சை​யின் வலியைக் குறைப்​பதே இதன் நோக்​க​மாகும்” என்​றார்.

இந்​நிகழ்​வில் அப்​போலோ​வின் சென்னை மண்டல தலை​மைச் செயல் அதி​காரி டாக்​டர் இளங்​குமரன் கலியமூர்த்​தி, சென்னை அப்​போலோ மகளிர் மற்​றும் குழந்​தைகள் மருத்​து​வ​மனை​யின் தலை​வர் டாக்​டர் சுசீலா நாராயண​சாமி, இதய-​மார்​பறை அறுவை சிகிச்சை சேவை​கள் இயக்​குநர் டாக்​டர் நெவில் ஏ.ஜி.சாலமன், அப்​போலோ மருத்​து​வ​மனை​களின் செயல் உத்திகளுக்​கான இயக்​குநர் சிந்​தூரி ரெட்டி மற்​றும் மருத்துவக்குழு​வினர்​ கலந்​து​கொண்​டனர்​.

பிறவி இதயக் குறைபாடு உள்ள 50 குழந்தைகளுக்கு தோல் வழியாக ஃபோன்டன் சிகிச்சை - அப்போலோ குழந்​தைகள் மருத்துவமனை உலக சாதனை
தாய்​மாமன் மோதிரம் திட்ட நிபந்தனை தளர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in