Published : 10 May 2024 08:43 AM
Last Updated : 10 May 2024 08:43 AM

விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ’உயர்வுக்கு உயர் கல்வி’  பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆன்லைன் தொடர் நிகழ்வு நாளையும் நாளை மறுநாளும் (மே 18, 19) நடைபெறுகிறது

சென்னை:

பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ - மாணவியர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ’உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆன்லைன் தொடர் நிகழ்வின் 10-வது, 11-வதி பகுதிகள் நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கும், மாலை 6 மணிக்கும், 12-வது பகுதி நாளை மறுநாள் (ஞாயிறு) மாலை 6 மணிக்கும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சவீதா இன்ஜினியரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஆகியன இணைந்து வழங்குகின்றன.

வரும் சனிக்கிழமையன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள பத்தாவது பகுதியில் ‘ரோபோட்டிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ் & விர்ச்சுவல் ரியலிட்டி துறையிலுள்ள வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், சென்னை விஐடி, ஸ்கூல் ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறை உதவிப் பேராசிரியர் ஜி.முரளிமோகன், பெங்களூரு ஏஆர்கே இன்ஃபோஷொலுசன்ஸ் பி.லிட்., கண்ட்ரி மேனேஜர் (HE) ஜெ.விஸ்வேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

வரும் சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள பதினோராவது பகுதியில் ‘ஃபுட் டெக்னாலஜி & அக்ரிகல்சர் சயின்ஸ் துறையிலுள்ள வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், கோயமுத்தூர் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.பரணி, மைசூரு டிஃபென்ஸ் ஃபுட் ரிசர்ச் லேபரட்டரி அசோசியேட் டைரக்டர் டாக்டர் ஆர்.குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

வரும் ஞாயிறன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள ஏழாவது பகுதியில் ‘விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் & ஃபிலிம் டெக்னாலஜி கோர்சஸ் மற்றும் வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில், சென்னை ஆவிச்சி காலேஜ் ஆந்ப் ஆர்ட்ஸ் & சயின்ஸ் விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி.அபிநயா, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் அகாடமிக் இன்சார்ஜ் பேராசிரியர் ஜெ.சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்த இரு நிகழ்வைவும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார்.

இந்நிகழ்வில் பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டிய பலவகையான படிப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், கல்விக்கட்டணம், உதவித்தொகை பெறும் வழிமுறைகள், துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. நிகழ்வின் நிறைவாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் வல்லுநர்கள் பதிலளிக்க உள்ளனர்.


இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணமேதுமில்லை. பங்கேற்க விரும்புபவர்கள், https://www.htamil.org/UUKW05 என்ற லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QR Code மூலமாகப் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். முதலில் பதிவுசெய்யும் 30 மாணவர்களுக்கு டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘அடுத்த கலாம்’ எனும் நூல் பரிசாக வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x