Last Updated : 02 Dec, 2016 09:22 AM

 

Published : 02 Dec 2016 09:22 AM
Last Updated : 02 Dec 2016 09:22 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 17: கல்லூரி சாலைக்குப் பெயர் தந்தது எது?

எல்லோரும் நினைத்துக் கொண்டி ருப்பதைப் போல நுங்கம்பாக்கம் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி அமைந் திருப்பதால் அந்தச் சாலைக்கு கல்லூரி சாலை என்ற பெயர் வந்துவிடவில்லை. அந்தக் கல்லூரி ஏற்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்னதாக, புனித ஜார்ஜ் கோட்டையில் பணிபுரியத் தேர்வு செய்யப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் படிப்பதற்கான தென்னிந்திய மொழி களைக் கற்றுத் தரும் கல்லூரி அங்கு தொடங்கப்பட்டதால் ஏற்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பெனியில் பணி புரிய வரும் வெள்ளைக்காரர்கள் அங்கே 2 ஆண்டுகள் தங்கி தென்னிந்திய மொழிகளைப் படித்துத் தேற வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை அங்கே கற்றுத் தரப்பட்டன. இரண்டு மொழிகளில் அவர்கள் சிறப்புப் பெற வேண்டும். இதற்காகவே கிழக்கிந்தியக் கம்பெனியார் நான்கு தென்னிந்திய மொழிகளின் சொற்கள் அடங்கிய அகராதியைத் தயாரித்தனர்.

நான்கு தென்னிந்திய மொழிகளைக் கற்றுத் தருவதென்றால் அதற்கு நல்ல நூலகம் வேண்டும். 1812 முதல் அங்கே முதல் தரமான நூலகம் ஒன்று செயல்பட் டது. மெட்றாஸ் ஆசிய சங்கம் (ஏ.எஸ்.எம்.) என்ற அமைப்புடன் அந்த நூலகம் இணைந்து செயல்பட்டது. கொல்கத்தாவில் இருந்த ராயல் ஆசிய சங்கத்துடன், மெட்றாஸ் ஆசிய சங்கம் இணைந்திருந்தது. காலப்போக்கில் அந்த சங்கமே நூலகத்துக்கும் சென்னை அருங்காட்சியகத்துக்கும் புரவலரானது. தனது சேவைகளையும் அது விரிவு படுத்தியது. 1829-ல் மெட்றாஸ் ஆசிய சங்கம், மெட்றாஸ் இலக்கிய சங்கமாகத் திருத்தி அமைக்கப்பட்டது. சூயஸ் கால்வாய்க்குக் கிழக்கில் சந்தாதாரர்கள் உதவியுடன் செயல்படும் நீண்ட கால நூலகமாக அது திகழ்ந்தது. 1906-ல் அது வேறு இடத்துக்கு இடம் மாறியது. அந்த வளாகமே இப்போது பொதுக் கல்விக்கான இயக்குநரகம் (டி.பி.ஐ.) என்று அழைக்கப்படுகிறது.

அந்த நூலகம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. மெட்றாஸ் மாநகரம் பெருமை கொள்ளும் இன்னொரு நிறுவனமாகத் திகழ்ந்தது. ஆரம்பக் காலத்தில் அது சந்தாதாரர்களுக்கு வீடு தேடிச் சென்று புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தது. 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அங்கே சேர்ந்தன. அவற்றில் 1,000 புத்தகங்கள் 16-வது நூற்றாண்டில் இருந்து 19-வது நூற்றாண்டு வரையில் வெளியானவை. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை 19-வது நூற்றாண்டில் வெளியானவை. கடந்த சில பத் தாண்டுகளாக நிதி பற்றாக்குறையாலும் வாசகர்கள் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துவிட்டதாலும் நூலகம் தேய்ந்து யாராலும் கண்டுகொள்ளப்படாமல் மறக்கப்பட்டுவிட்டது. அதன் புத்தகங் கள் பராமரிப்பு குறைவால் பாதிக்கப் பட்டுள்ளன. அந்த இடத்தையே இருட்டறையாகக் கருதி மற்றவர்கள் கடந்துவிட்டனர்.

ஆனால், இப்போது புதிய காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. அரிய புத்த கங்கள் மீட்கப்பட்டு நல்ல நிலைமைக் குக் கொண்டுவரப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. நூலகமே சீர்படுத்தப் பட்டு புதுப்பிக்கப்படும் என்றும் தெரி கிறது. தகுதிவாய்ந்த நூலகர்களைக் கொண்டு, வாசகர்களுக்கு நல்ல முறை யில் சேவை செய்யவும் திட்டமிடப்படு கிறது. மிகவும் புராதனமான இந்த நிலை யம் புத்துயிர் பெற்று ஏராளமானோருக் குப் பயன்பட வேண்டும் என்பதே புத்தக நேயர்களின் விருப்பம். முப்பதாண்டு களுக்கும் மேலாக நூலக சேவைக் குழு உறுப்பினராகவும் நலம் விரும்பியாக வும் இருக்கும் நான் இந்தக் கனவு கள் நனவாக வேண்டும் என்றே வேண்டு கிறேன். ஆனால், இப்படி பலமுறை நம்பிக்கை மட்டுமே ஏற்படுத்தியிருக் கிறார்கள் என்பதையும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தப் புத்தகங்களைப் பராமரிக்க முடியாவிட்டாலோ, போதிய எண்ணிக் கையில் புதிய வாசகர்கள் கிடைக்கா விட்டாலோ முயற்சிகளைக் கைவிட்டு விடக் கூடாது. அரிய இப்புத்தகங்களை மீட்டு வேறு வகையில், வேறு நூலகங்கள் மூலம் மக்களுடைய பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

‘செத்த’ காலேஜால் வந்த பெயரா?

சில நாட்களுக்கு முன்னால் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது, மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவி ஒருவர் என்னைச் சந்தித்தார். “செத்த காலேஜால்தான் அந்தத் தெருவுக்கு ‘காலேஜ் ரோடு’ என்று பெயர் வந்தது என்று எப்படி எழுதினீர்கள்?” என்று சண்டைக்கு வந்தார். மெட்றாசில் அந்தக் காலத்தில் அருங்காட்சியகத்தை ‘செத்த காலேஜ்’ என்றும், வன விலங்குகள் அடைக்கப்பட்ட பூங்காவை ‘உயிர் காலேஜ்’என்றும் அழைத்தார்கள். ‘காலேஜ்’என்றால் அறிவைப் புகட்டும் இடம் என்ற பொருளில் அப்படிச் சொன்னார்கள். கல்லூரி சாலையின் பெயர்க் காரணத்தை முன்னரே கூறிவிட்டேன்.

1812-ல் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி 1854-ல் மூடப்பட்டது. பிரிட்டிஷ் சிவில் நிர்வாகிகளுக்கு லண்டனிலேயே பயிற்சி தருவதால் அவர்களை இங்கு தேர்வு வாரிய உறுப்பினர்கள் கேள்விகேட்டு சோதித்தால் போதும், மீண்டும் இங்கே பாடம் படிக்கத் தேவையில்லை என்று முடிவு செய்து கல்லூரியை மூடினார்கள். ஆனால் அந்தக் கல்லூரி தன்னுடைய 42 கால வரலாற்றில் திராவிட மொழிகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஆய்வுகளை நடத்தியிருந்தது.

அந்தக் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் கூடி ஒரு அச்சகத்தையும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தையும் கிழக்கிந்திய கம்பெனி யின் மானிய உதவியோடு சிறப்பாக நடத்தினார்கள். திராவிட மொழிகளில் காலத்தால் அழியாத பல புத்தகங்களை வெளிக்கொண்டு வந்தார்கள். சார்லஸ் பிரவுன் என்ற ஆங்கிலேயர் தெலுங்கு மொழியில் பெரும் புலமை பெற்றார். மைரன் வின்ஸ்லோ தமிழில் அகராதி தயாரித்தார். சி.இ. கேம்ப்பெல் தெலுங் கில் இலக்கண நூலை யாத்தார். டி.சி. மோரிஸ் தெலுங்கு அகராதியைத் தொகுத்தார். மெக்கரல் கன்னட மொழி இலக்கண நூலைத் தயாரித்தார். ரீவ் கன்னட மொழி அகராதியைத் தயாரித் தார். சி.எம்.விஷ் மலையாளத்தில் அகராதி, இலக்கண நூல்களைத் தயாரித் தார். அதுவரையில் பனையோலைகளில் எழுதியும் வாய் மூலமாக கற்றுக் கொடுத்தும் வழங்கி வந்த தென்னிந்திய மொழிகள் புத்தகங்களாக அச்சிடப் பட்டு ஆயிரக்கணக்கானோரை அடைந் தன. ஜே.சி.பெஷ்ஷி என்ற பாதிரி யாரின் தமிழ் இலக்கண நூல்தான் முதலில் அச்சிடப்பட்டது. சிதம்பர பண்டாரத்தின் தமிழ் நூல் இங்கிருந்து தான் வெளியானது. சிதம்பர பண்டாரம் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தார். மசூலிப் பட்டினத்தைச் சேர்ந்த மும்முடி வெங்கய்யா என்பவர் ‘ஆந்திர தீபிகை’ என்ற பெயரில் தெலுங்கு இலக்கண நூலை எழுதினார். அந்த நூலுக்கான காப்புரிமம் 1,000 பகோடாக்கள் (சாப்பிடும் நொறுக்குத்தீனி அல்ல) கொடுத்து வாங்கப்பட்டது.

அந்தக் கல்லூரியின் கட்டிடங்கள் அழகும் உறுதியும் வாய்ந்தவை. செந்நிற செங்கல் கட்டிடம் அது. சில காலம் அதில் அமெரிக்காவின் ‘கேர்’ நிறுவன அலுவலகம் செயல்பட்டது. பிறகு அங்கே கல்வித்துறையின் அலுவலகங் கள் இடம் பெறத் தொடங்கின. அந்தக் கல்லூரிக்கு இரண்டு அற்புதமான நுழை வாயில்கள். ஒரு வாயில் கல்லூரிச் சாலை யிலேயே இருக்கிறது. மற்றொன்று எவர் கண்ணிலும் படாமல் கூவம் நதிக்கரையோரம் இருக்கிறது. அந்தக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்கு மெட்றாஸ் கவர்னர் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து படகில் ஏறி, கூவம் நதி வழியாக வந்து, இந்தக் கல்லூரியின் இன்னொரு வாயில் வழியாக பட்டமளிப்பு விழா நடக்கும் அரங்குக்கு வருவார். இந்தக் கட்டிடம் உண்மையிலேயே பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பாரம்பரியச் சின்னம்தான். மெட்றாஸ் கூவம் ஒரு காலத்தில் நன்னீர் ஆறாக இருந்ததற்கு இன்னொரு வரலாற்றுச் சான்று இது!

- சரித்திரம் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x