Last Updated : 04 Nov, 2016 10:14 AM

 

Published : 04 Nov 2016 10:14 AM
Last Updated : 04 Nov 2016 10:14 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 13: குறுகலான தெருவுக்குப் பெயர் ‘பிராட்-வே

சென்னை உயர் நீதிமன்றம் அருகி லிருந்து தொடங்கிச் செல்லும் சாலைக்கு ஏன்தான் ‘பிராட்வே’ என்று பெயர் வைத்தார்களோ? ‘நேரோவே’ (குறுகலான சாலை) என்று பெயரை மாற்றிவிடலாம் என்று எஸ்.சந்தானம் என்ற வாசகர் அங்கலாய்த் திருக்கிறார். மாநகராட்சியின் ஆவணங் களில் பழைய சொத்துகளைப் பற்றிய குறிப்புகளில் இந்தச் சாலையை ‘பாபம் சுப்பராயுடு வே’ என்றே இருப்பதாகக் கூறுகிறார். பின்னர் இதுவே, ‘போபாம்’ஸ் பிராட்வே’ என்று மாற்றப்பட்டதாம். இதை என்னால் ஏற்க முடியவில்லை. நகர ஆவணங்களைப் பார்க்கும்போது 18-வது நூற்றாண்டின் இடைப் பகுதியில் இச்சாலை, கட்டிடம் ஏதுமில்லாத காலி இடமாக இருந்திருக்கிறது. ஒரு சாக்கடை ஓடியிருக்கிறது. இதை ஆட்ட பள்ளம் என்று அழைத்திருக்கிறார்கள். மேற்கிலிருந்த பெத்தநாயக்கன் பேட்டை யைக் கிழக்கிலிருந்த முத்தியாலுப் பேட்டையிலிருந்து இந்த சாக்கடைப் பிரித்திருக்கிறது. 1749-க்குப் பிறகு சென்னப்பட்டணத்தின் புதிய குடி யிருப்புகள் இவ்விரு பகுதிகளில் இருந்தன.

முன்னணி வழக்கறிஞரும் சமூக சேவகருமான ஸ்டீஃபன் போபாம் என்பவர் 1778 முதல் தனது வாழ்நாளின் இறுதியான 1795 வரையில் மெட்றாஸில் வாழ்ந்திருக்கிறார். 2 குதிரைகள் பூட்டப் பட்ட 2 சக்கரங்களைக் கொண்ட அவரு டைய கோச் வண்டி கவிழ்ந்து விபத் துக்குள்ளானதால் அவர் இறந்தார். ஆட்ட பள்ளம் உட்பட நகரின் எல்லா சாக்கடைகளையும் ஆழப்படுத்தி சாக்கடை தேங்காமல் நீர் வடிய அவர் காரணமாக இருந்தார். அந்த ஆட்ட பள்ள வாய்க்காலை ஒட்டி சென்னபட்ட ணத்தின் வடக்கு, தெற்குப் பகுதிகளை இணைக்கும் சாலையையும் ஏற்படுத்த அவர் காரணமாக இருந்திருக்கிறார். எனவே அந்தச் சாலைக்கு ‘போபாம்’ஸ் பிராட்வே’ என்று பெயரிட்டுள்ளனர். அன்றைய மெட்றாஸுக்கு மொத்த விலை மார்க்கெட், போலீஸ் படை, நகர குடிமக்களின் பதிவேடு, வீதிகளுக்குப் பெயர்ப் பலகைகள், விளக்குகள், மதுபானக் கடைகளுக்கு உரிமங்கள், நகரின் வடக்குப் பகுதிக்குப் பாதுகாப்பு வேலி போன்றவை கிடைக்கக் காரணமாக இருந்திருக்கிறார்.

லண்டனிலிருந்து வெளிவரும் ‘தி இன்டிபென்டன்ட்’ என்ற முன்னணி நாளித ழில் போபாம் பற்றியும் மெட்றாஸ் நகரில் அவர் செய்த சாதனைகள் குறித்தும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. அவரு டைய வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பத்திரிகையின் டெல்லி நிருபராக இருந்ததால் அவரை நினைவுகூர்ந்து கட்டுரை எழுதியிருக்கிறார். சென்னை மாநகராட்சி அவரை நினைவுகூர்ந்தும் அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தி லும் ஏதேனும் நினைவுச் சின்னத்தை அமைக்குமா?

பொற்காலத்தின் முடிவு!

கோலார் தங்க வயல் மூடப்பட்டுவிட் டது. கர்நாடகத்தின் கோலார் மாவட்டம், பங்காருப்பேட்டை வட்டத்தில் கோலார் தங்க வயல் இருந்தாலும் பழைய மெட்றாஸ் நகருக்கும் அதற்கும் நெருக் கம் இருந்தது. ராபர்ட் பிளாக் என்ற ஆங்கிலேயர் ‘பெஸ்ட் அண்ட் கோ’ என்ற நிறுவனத்தை 1878 முதல் 1898 வரையில் நிர்வகித்து வந்தார். அந்த 20 இருபதாண்டுகள் அந் நிறுவனத்துக் குப் பொற்காலமாகும். அப்போது அவர் மண்ணெண்ணெய் என்று அழைக்கப் படும் கெரசின் (கிருஷ்ணாயில்!) மற்றும் தங்க விற்பனையில் கொடிகட்டிப் பறந்தார்.

வெளிநாட்டிலிருந்து தென்னிந்தியா வுக்கு கெரசினை இறக்குமதி செய்து விற்ற முன்னோடிகளில் அவருடைய நிறுவனமும் ஒன்று. கப்பலில் வந்து இறங்கியதாலேயே அதற்கு சீமெண் ணெய் (சீமையிலிருந்து வரும் எண் ணெய்) என்றும் பெயர் வழங்கப்பட்டது. 1889-ல் மெட்றாஸ் மாகாணத்துக்கே மிகப் பெரிய விநியோக நிறுவனமாகிவிட்டது பெஸ்ட் அண்ட் கோ. பர்மா ஷெல் என்ற எண்ணெய் நிறுவனம் ராயபுரத்தில் மிகப்பெரிய சேமிப்புத் தொட்டியை 1893-ல் கட்டியபோது அதன் தென்னிந்திய விற்பனை முகவரானது பெஸ்ட் அண்ட் கோ. அந் நிறுவனத்தையே கிருஷ்ணா யில் நிறுவனம் என்றே மக்கள் அழைத் தனர். வடக்கு கடற்கரைச் சாலையில் அப்போது அதற்கு ஃபர்ஸ்ட் லேன் பீச் என்று பெயர் மிக அழகான கட்டிடத்தில் அந் நிறுவனம் செயலாற்றி வந்தது. இப்போது அச் சாலையை ராஜாஜி சாலை என்று அழைக்கின்றனர். அந்தக் கட்டிடத்தை பர்மா ஷெல் கட்டிடம் என்பார்கள்.

இதே காலத்தில்தான் பெஸ்ட் அண்ட் கோ நிறுவனம் கோலார் தங்க வயலுக்கும் நிர்வாக முகவராகச் செயல்பட்டது. தங்கம் வெட்டியெடுத்த சுரங்க நிறுவனத்தைவிட, அதன் விற்பனை முகவரான பெஸ்ட் அண்ட் கோ நல்ல லாபம் ஈட்டியது!

இப்படி கெரசின், தங்கம் இரண்டு விற்பனையிலும் முன்னணியில் இருந்த பெஸ்ட் அண்ட் கோ மேலும் மேலும் வளர்ந்து பெரிதாகியிருக்க வேண்டும்; எங்கோ தவறிவிட்டது. 1933-ல் பர்மா ஷெல் நிறுவனம் தனது அலுவலகத்தை அக் கட்டிடத்திலிருந்து காலி செய்து கொண்டு சென்ற பிறகு பிரதான கட்டிடத்தை கலீலி என்ற நிறுவனம் வாங்கியது. பிறகு அது டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டி.ஐ.) நிறு வனத்துக்கு விற்றுவிட்டது. முரு கப்பா (தொழில்) குழுமம் என்று அழைக்கப்படும் டி.ஐ. நிறுவனம் தன்னை வலுப்படுத்தி வந்த உணராத காலம் அது. எனவே அக் கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு தங்களுடைய தொழில், வர்த்தகத் தேவைக்கேற்ப பல அடுக்கு நவீன அடுக்கு மாடி தலைமையகக் கட்டிடத்தை அதே இடத்தில் கட்டியது.

டி.ஐ. நிறுவனம் இப்போது பாரம்பரியச் சின்னங்களைப் பாது காக்கும் இயக்கத்தில் முன் நிற்பது குறிப்பிடத்தக்கது.

பெஸ்ட் அண்ட் கோ, நேஷனல் பேங்க், அர்பத்நாட், பென்டிங் கட்டிடம் போன்றவை 40 ஆண்டுகளுக்குள்ளாக அடுத்தடுத்து இடிக்கப்பட்டுவிட்டன. அவையெல்லாம் இடிக்கப்படாமல் வலுப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருந் தால் சென்னை மாநகர வீதிகள் பாரம்பரியக் கட்டிட வரிசைகளால் உலகப் புகழை அடைந்திருக்கும்.

- சரித்திரம் பேசும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x