Last Updated : 21 Oct, 2016 12:12 PM

 

Published : 21 Oct 2016 12:12 PM
Last Updated : 21 Oct 2016 12:12 PM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 10: மெட்றாஸின் நினைவுச் சின்னங்கள்

ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் என்ற வங்கி நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள், அவர் களுக்கு என்று ஒப் படைக்கப் பட்ட பணியை மிக அற்புத மாக நடத்தி முடித்துள்ளனர்; மும்பை மாநகரில் தங்களுடைய தலைமை அலு வலகம் அமைந்திருந்த கட்டிடத்தைப் பழுதுபார்த்து, வலுப்படுத்தி, புது வண்ணம் தீட்டி, அச்சு அசலாக அதை முதலில் கட்டியபோது இருந்த அதே தோற்றத்துக்குக் கொண்டுவந்துவிட்ட னர். பழைய கட்டிடத்தை எப்படிப் புதுப் பிக்க வேண்டும் என்பதற்கு இலக்கண மாக அமைந்துவிட்ட அச்செயல், இரண்டு காரணங்களுக்காகப் பாராட் டப்பட வேண்டும்.

முதலாவது சரியான விதத்தில் திட்ட மிட்டு சரியானவர்களைக் கொண்டு அதைப் புதுப்பித்ததற்காக; இரண்டா வது பழமையைப் பாதுகாக்க விரும்பு வோர் மனம் குளிரும் வண்ணம் அதன் தொன்மையைக் கருதி, எந்த மாறுதலை யும் செய்யாமல் அப்படியே புதுப் பித்ததற்காக.

ஆனால் மெட்றாஸில் அந்த வங்கி நிர் வாகம் அப்படி நடந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையும் ஆர்மீனி யன் சாலையும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் தலைமை அலுவலகம் கடந்த சில ஆண்டுகளில் தோற்றத்தில் சில மாற்றங்களுக்கு உள்ளானது. 1871-ல் கட்டப்பட்ட இக் கட்டிடத்தில் மெட்றாஸ் கிளை 1900-ல் குடியேறியது. இந்திய-முகலாய கட்டிடக் கலை பாணியில்தான் இக்கட்டிடம் கட்டப்பட்டது. 1950-ல், அருகில் இருந்த நவீன கட்டிடங்களின் மோஸ்தருக்கு ஏற்ப இதன் தோற்றத்தின் பொலிவும் கூட்டப்பட்டது. 30 ஆண்டு களுக்கு முன்னால் இதுவும் மற்றொரு கட்டிடம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. பிறகு, அதன் தனித்துவம் மங்கிவிட்டது.

மும்பையில் தனது தலைமை அலு வலகத்தைப் புதுப்பித்த வங்கி நிர்வாகம், மெட்றாஸ் கிளை மீதும் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். எஸ்பிளனேடு சாலையில் இது முக்கிய அடையாளச் சின்னமாகவே திகழ்ந்தது. இந்தக் கட்டிடத்தைப் புதுப்பிப்பதில் அதிக செலவு ஏற்படும், பயன் இல்லை என்று கருதியிருந்தால் ராயப் பேட்டை நெடுஞ்சாலையில் அடையாளச் சின்னமான கிளையின் கட்டிடத்தையா வது அப்படி மாற்றியிருக்கலாம். உலக அளவில் புகழ் பெற்ற வங்கி நிறுவனம் தன்னுடைய பழைய கட்டிடங்களைப் புதுப்பித்து காட்சிக்கு அழகாக மாற்றுவது அதன் பழைய வாடிக்கையாளர்களுக்கு பழைய நாட்களை நினைவுபடுத்தி மனதுக்கு மகிழ்ச்சியை ஊட்டும். வங்கி வணிகத்தில் முன்னேற உதவிய ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அடுத்த இடத்தை வங்கிக்குப் பயன்பட்ட கட்டிடங்களுக்கும் தந்து நன்றிக் கடனை காட்டலாமே?

புனித மார்ட்டின் தேவாலயம்

மெட்றாஸ் மாநகரில் உள்ள தேவாலயங்கள் - அதிலும் குறிப் பாக புராட்டஸ்டெண்ட் பிரிவினரின் தேவாலயங்கள் - 1726-ல் அர்ப்பணிக் கப்பட்ட லண்டன் மாநகரின் புனித மார்ட் டின் தேவாலயத்தைப் பின்பற்றி பண்டிகைக்கான ஏற்பாடுகளைத் தொடங்குகின்றன. இப்போது டிரஃபால் கர் சதுக்கத்தில் ஊரின் மையமான இடத்தில் இருக்கும் இந்தத் தேவாலயம் ஒரு காலத்தில் வயல்வெளியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கட்டப்பட்டதுதான். நாளாவட்டத்தில் வயல்கள் மறைந்து நகரம் விரி வடைந்து பெரிய சதுக்கமே அருகில் உருவாகிவிட்டது. மிகப் பெரிய தூண் களும் வரிசை வரிசையாக எல்லாபுறங் களிலும் பரவியுள்ள படிகளும் அழகிய நுழைவுவாயிலும் உள்புறங்களில் அலங்கார வேலைப்பாடுகள் மிக்க விதானங்களும் ரோமானியக் கட்டிடக் கலை பாணி விதானமும் அதன் மீது அழகிய கோபுரமும் தேவாலயத்தைப் பார்க்கும்போதே பரவசத்தை ஊட்டி விடும். இந்த தேவாலயத்தின் தோற்றத்தைப் போலத்தான் மெட் றாசிலும் புனித ஜார்ஜ் கதீட்ரல், புனித ஆண்ட்ரூ கிர்க், கிறைஸ்ட் சர்ச் என்ற பெயரில் தேவாலயங்கள் கட்டப்பட்டன.

புனித ஜார்ஜ் தேவாலயத்துக்கும் புனித ஆண்ட்ரூ தேவாலயத்துக்கும் இரண்டு அமைப்புகளில் வேறுபாடுகள் உண்டு. அவை அஸ்திவாரம் மற்றும் பிரார்த்தனைக்கான இடம். புனித ஆண்ட்ரூ தேவாலயத்தில் பிரார்த்த னைக்கு மக்கள் கூடும் இடம், வட்ட வடிவில் சுற்றிலும் 16 தூண்களுடன் கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கும். இந்திய பாணியில் இதற்கு அஸ்திவாரம் போடப்பட்டது. இதன் கீழே ஏராளமான கிணறுகள் தோண்டப்பட்டிருந்தனவாம். புனித ஜார்ஜ் தேவாலயத்தின் அஸ்திவாரம் மேற்கத்திய பாணியில் அமைக்கப்பட்டது.

தென்னிந்தியாவில் தேவாலயங் களின் கட்டுமானம் குறித்து ஸ்காட் லாந்தைச் சேர்ந்த டாம் இங்லிஸ் என்ற நிபுணர் ஆராய்ந்து புத்தகம் எழுதியுள்ளார். 19-வது நூற்றாண்டில் புராட்டஸ்டெண்ட் பிரிவினர் இந் தியாவில் கட்டிய தேவாலயங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த பொறியாளர்களால் வடிவமைக் கப்பட்டது.

அவர்கள் பிரிட்டனில் இருந்து வெளியாகும் சஞ்சிகைகளில் அச் சான தேவாலயங்களைப் பார்த்து வரைபடம் தயாரித்தார்கள். அதன்படி கட்டித் தருமாறு உள்ளூர் கட்டிடக் கலைஞர்களிடம் கூறியதுடன், உள் ளூரில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி விரும்பிய விதத்தில் கட்டுமாறு சுதந்திரம் அளித்துள்ளனர். அதனால் உறுதியும் கலையழகும் மிக்க தேவாலயங்கள் உருவாயின.

- சரித்திரம் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x