Published : 29 Sep 2016 05:22 PM
Last Updated : 29 Sep 2016 05:22 PM

நெட்டிசன் நோட்ஸ்: - யூரி தியாகிகளும் ராணுவ பதிலடியும்!

காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டது. இந்த பதில் தாக்குதலை யூரி தாக்குதலில் பலியான வீரர்களுக்குச் செலுத்தப்பட்ட அஞ்சலியாகக் கருதும் இணையவாசிகள், இந்திய ராணுவத்தைப் பாராட்டி Indian Army, பதில் தாக்குதலுக்கு #SurgicalStrike மற்றும் பிரதமர் மோடி பதிலடி கொடுத்ததாகக் கூறி #ModiPunishesPak, ஆகிய ஹேஷ்டேகுகளை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இவையனைத்தும் ட்ரெண்டிங்கில் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், தாக்குதல் நடைபெற்ற கட்டுப்பாட்டு எல்லைக் கோடான #Line of Control-ம் ட்ரெண்டாகி வருகிறது. அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Paresh Rawal

சில வருடங்களுக்கு முன்பே இந்தியா செய்து முடித்திருக்க வேண்டிய வேலையை இப்போது செய்திருக்கும் இந்திய ராணுவத்துக்கும், பிரதமருக்கும் வாழ்த்துகள்.

ShafaqAwan

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்தவர்களுக்கான பரிசு #SurgicalStrike.

Chetan Bhagat

இதில் பெருமைப்பட எதுவுமில்லை. வெட்கப்படவும் தேவையில்லை. என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்திருக்கிறீர்கள்.

Shradha Agarwaal

நம் வீரர்களுக்கும், பிரதமருக்கும் வணக்கங்கள். அவர்களின் கைகளில் நாம் முழுக்கப் பாதுகாப்பாக இருக்கிறோம்.

Devika

இந்திய ராணுவம் எப்போதுமே பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்துக்குத் தயாராகவே இருந்திருக்கிறது. இன்று அதைச் செயலாற்றி இருக்கிறது.

Mayank Patel

தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை வேறெந்த இந்திய அரசும் இத்தனை சிறப்பாகக் கையாண்டதில்லை. பெருமிதத்தருணம். #ModiPunishesPak

Bhaiyyaji ‏

இந்த முறை தீபாவளியைக் கொஞ்சம் சீக்கிரமாகக் கொண்டுவந்த இந்திய ராணுவத்துக்கு நன்றிகள். தீப ஒளிகளை யூரி தியாகிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Your Newsreader

யூரி சம்பவத்திற்கான சிறந்த பதிலடி. பிரதமர் மோடி சொன்ன சொல்லைக் காப்பாற்றிவிட்டார்.

Tipu Sultan

#ModiPunishesPak என்று கூறுபவர்கள் கொஞ்சம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கலாம். இந்திய ஆயுதப்படைகள் தேவைப்பட்டபோது செயல்பட்டே வந்திருக்கின்றன.

Veeraraghavan VS ‏

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்திய ராணுவத்தின் தீர்க்கமான நடவடிக்கை. உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள். ஜெய் ஹிந்த்.

சி.பி.செந்தில்குமார் ‏

பொங்கியெழுந்த இந்தியா. தாக்கியதில் அழிந்த தீவிரவாத முகாம்கள் #என் பேரு மாணிக்கம். எனக்கு இன்னொரு பேர் இருக்கு.

iPrashant ‏

எல்லா வினைகளுக்கும், அதற்குச் சமமான, வலிமையான எதிர்வினைகள் உண்டு. #IndianArmy #jaihind

Ashok Kumar

இந்திய நாட்டின் சுய மரியாதையையும், தன்னம்பிக்கையையும், வலிமையையும் திரும்பவும் மீட்டுத்தந்த ராணுவத்துக்கு நன்றிகள்.

Gururaja H S

வீரர் பகத் சிங்கின் 109-வது பிறந்தநாளுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பரிசு.

Stanislaus ‏

"கார்கில் போருக்குப் பின் இந்தியா பாகிஸ்தானை தாக்குவது இதுவே முதல்முறை". உரி தாக்குதலுக்கு இந்தியா உரிய பதிலடி..

Harshad Salunke

யூரி தாக்குதலில் பலியான தியாகிகளுக்கு இந்திய வீரர்கள் செலுத்திய உண்மையான அஞ்சலி. #Jaihind

d e v a n s h i. ‏

தேசத்தைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பயணம் வைக்கும் இந்திய ராணுவத்துக்கு வீர வணக்கங்கள்.

Kapil Mishra

இந்திய ராணுவம் வரலாறு படைக்கட்டும். ஒட்டுமொத்த தேசமும் அவர்களின் பின்னால் வலிமையோடு நிற்கும்.

Col. VN Thapar

பிரதமர் மோடி இந்திய ராணுவத்தின் தற்காப்பு மனநிலையை மாற்றி, தாக்கும் மனநிலையைக் கொடுத்திருக்கிறார்.

MadhuPurnima Kishwar ‏

இந்திய ராணுவத்தைப் பாராட்டுகிறேன். அதே நேரம் அவர்களின் பலத்தை இன்னும் கூட்ட வேண்டும். அரசியல்வாதிகளின் கைகளில் முடங்காமல் அவர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

IndiaSpeaks ‏@IndiaSpeaksPR

இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்லவில்லை என்பது மிக முக்கியமான விஷயம். நம் ராணுவம் அத்துமீறி நுழைந்த பாக். தீவிரவாத முகாம்களையே அழித்திருக்கிறது.

Neha ‏

இந்திய ராணுவத்தின் செயல்களை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். அத்தோடு அமைதியை வேண்டி ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

RAJESH MUDGAL

உலகக் கோப்பையை வென்ற தருணம் பெரிதாகத் தெரியவில்லை. கிரிக்கெட்டை விடவும், சினிமாவை விடமும், ராணுவம் இன்று உண்மையான மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x