Last Updated : 26 Feb, 2016 03:06 PM

 

Published : 26 Feb 2016 03:06 PM
Last Updated : 26 Feb 2016 03:06 PM

மன்னா... என்னா?

‘‘ராஜாதி ராஜ, தனிக்காட்டு ராஜ, போக்கிரி ராஜ, ராஜா சின்ன ரோஜ, தர்மத்தின் தலைவர் பராக் பராக்! மன்னர் நகர்வலம் புறப்பட்டுவிட்டார்..’’

தண்டோரா சத்தம் கேட்க, அரண்மனை பரபரப்பாகிறது. மந்திரி, தளபதி பிரதானிகள், அல்லக்கைகள் பரிவாரம் மன்னருடன் புறப்படுகிறது. நகர்வலத்தின் முதல் ஸ்பாட் ஒரு பள்ளிக்கூடம். மழலைக் குட்டீஸ்கள் ஆடிப் பாடி விளையாடியபடி இருக்கின்றனர். குஷியாகிறார் மன்னர்.

‘‘அமைச்சரே! அரசு கஜானாவில் இருந்து ஐயாயிரம் பொற்காசுகள் இந்த பள்ளிக்கூடத்துக்கு ஒதுக்க உத்தரவிடுகிறேன்’’

பொன்முடிப்பை வழங்கிவிட்டு புறப்படுகிறது மன்னர் அன் கோ. நகர்வலத்தின் அடுத்த ஸ்பாட் சிறைச்சாலை. ஏராளமான அறைகள், ஏகப்பட்ட கைதிகள். சிறை முழுவதையும் சுற்றிப் பார்க்கிறார் மன்னர்.

‘‘அமைச்சரே! அரசு கஜானாவில் இருந்து ஐம்பதாயிரம் பொற்காசுகள் இந்த சிறைச்சாலைக்கு ஒதுக்க உத்தரவிடுகிறேன். சிறையின் அனைத்து அறைகளுக்கும் குளிர்சாதன வசதி, எல்இடி டிவி வசதிகள் செய்யப்படட்டும்’’

பட்டாளம் ஜெர்க் ஆகிறது. ‘‘மன்னா! இது அழுகுணி ஆட்டம். பிஞ்சுக் கொழந்தங்கோ படிக்கிற இஸ்கூலுக்கு அஞ்சு, ரவுடிங்கோ, மொள்ளமாரிங்கோ இருக்கிற ஜெயிலுக்கு அம்பதா?’’

‘‘மட அல்லக்கை கூட்டங்களே! வாயை மூடுங்கள்! தேர்தல் முடிந்த பிறகு, நாம் மழலையர் பள்ளிக்கா போகப்போகிறோம்?’’

மன்னர் கேட்டதும் கூட்டம் கப்சிப்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x