Published : 11 Jul 2021 03:12 AM
Last Updated : 11 Jul 2021 03:12 AM

பளிச் பத்து 11: எரிமலைகள்

தொகுப்பு: பி.எம்.சுதிர்

ரோமானியர்களின் அக்னிதேவன் ‘வால்கன்’. அந்த பெயரை ஒட்டித்தான் எரிமலைகளுக்கு வால்கனோ என பெயர் வந்தது.

உலகில் சுமார் 1,500 எரிமலைகள் உள்ளன.

உறங்கும் எரிமலைகள், செயலற்ற எரிமலைகள், செயல்படும் எரிமலைகள் என 3 வகையான எரிமலைகள் உள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகவும் அதிகபட்சமாக 250 எரிமலைகள் உள்ளன.

கடல்களுக்கு அடியில் சுமார் 10 லட்சம் எரிமலைகளாவது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எரிமலைக் குழம்பின் வெப்பநிலை 1,250 டிகிரி சென்டிகிரேட் ஆகும்.

உலகின் மிக உயரமான எரிமலை ஹவாய் தீவில் உள்ளது. இதன் உயரம் 4,207 மீட்டர்கள்.

உலகில் இருப்பதைவிட மிகப்பெரிய எரிமலை செவ்வாய் கிரகத்தில் உள்ளது. அதன் உயரம் 21 கிலோமீட்டர்.

எரிமலைகள் வெடிக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் சாம்பல், 30 கிலோமீட்டர் பரப்பளவு வரை காற்றில் கலக்கும்.

இந்தோனேசியாவில் உள்ள காவா ஜென் என்ற எரிமலை, நீல நிற ஜுவாலையை வெளியிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x