Published : 22 Dec 2015 02:18 PM
Last Updated : 22 Dec 2015 02:18 PM

இணையகளம்: தனுஷின் அமுல் பேபி நக்கலும் சிம்பு ரசிகரும்

* தனுஷ் படங்களில் ஒரு அம்சம் எப்படியாவது இடம்பெற்றுவிடுகிறது. தனுஷை எதிர்க்கும் நபர்களின் கதாபாத்திரங்கள், வெள்ளை வெளேரென, பொதுவழக்கில் ‘பழம்’ என்று அழைக்கப் படுபவர்கள் போன்று அமைக்கப்படுகின்றன. ‘வேலை இல்லா பட்டதாரி’ படம் ஆகட்டும், ‘மாரி’யில் விஜய் யேசுதாஸ் பாத்திரம் ஆகட்டும், ‘தங்கமக’னில் அரவிந்த் பாத்திர மாகட்டும்… முற்கால ரஜினி படங்களில் ‘சரத்பாபு’ பாத்திரம் வடிவமைக்கப் படுவதைப் போல (அதன் உளவியல் வேறு எனினும்), செல்வராகவன் படங்களின் செகன்ட் ஹீரோ போல இது ஒரு வகையறா போலும்!

பெரும்பான்மையான தமிழர்கள் மாநிறம் கொண்டவர்கள். வெண்ணிறம் என்பது இங்கே மைனாரிட்டி. ஒருபுறம் பெண்களின் வெண்மை நிறத்தை ரசித்துப் போற்றி உச்சி முகரும் தமிழன், மனதளவில் அதே நிறத்தால் தாழ்வுமனப்பான்மையை வளர்த்துக்கொள்வான். ரஜினியின் மாபெரும் வெற்றிக்கு அவரது நிறமும் ஒரு காரணி என நான் கருதுகிறேன். ஒருபுறம் “வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” எனக் கூறிக் கொண்டே, அவர்களைப் ‘பழம்’ எனக் கிண்டல் அடிப்பதிலிருந்தே இந்த உளவியல் நம்பிக்கையின்மையைக் காணலாம்.

இதன் நீட்சியாக, சிலருக்கு அவர்களைக் கண்டாலே ‘ஒவ்வாமை’ ஏற்படும். வெள்ளையாக இருந்தால், “நீ பிராமின் தானே?” எனக் கேட்பவர்களும் இதே சமுகத்தில் உண்டு.

தனுஷை எதிர்ப்பவர், ‘அமுல் பேபி’ என்று நக்கலடிக்கப்படுகிறார். அவ்வளவு வில்லத்தனம் செய்யாதபோதும், அவர் தனுஷிடம் தோற்கும்போது ரசிகர்கள் கைதட்டுவது மேற்சொன்ன உளவியலால் ஏற்படும் மனக்கிலேசத்தினால்தானா? இதை உணர்ந்தே அந்தப் பாத்திரங்களின் தன்மை அப்படிக் கட்டமைக்கப்படுகின்றனவா? இயல்பு வாழ்க்கையைத் திரைப்படங்களில் பொருத்திப் பார்த்து, ரசிகர்கள் கிளர்ச்சியுறுகிறார்களா? என்பதெல்லாம் விடை தெரியாக் கேள்விகள்!

- தினேஷ் குமார்

* நான் முட்டிப்போட்டு முட்டிப்போட்டு நடித்தேன்: சிம்பு

# ஹாஹாஹா... முட்டிக்கிமுட்டி தட்டுவாங்கன்னு பயந்துட்டுதானே இப்பிடிச் சொல்றீங்க தம்பி, கவலைப்படாதீங்க. ஒங்கள விசாரிச்சிட்டு உட்டுடுவாங்க. அப்பிடியே கோர்ட்டு, கேசுன்னாலும் கடைசியில தப்பே செய்யலன்னு வெளிய உட்டுடுவாங்க. நான் சொல்றதுல நம்பிக்கையில்லன்னா சல்மான் கானுக்கு போன் பண்ணி கன்ஃபார்ம் பண்ணிக்குங்க.

- கருப்பு கருணா

* 25,000 ரூபா மதிப்புள்ள ஒரு லேப்டாப்ப ஒரு நாளைக்கு 16,000 ரூபா குடுத்தும், 5,000 ரூபா மதிப்புள்ள ஒரு ப்ரிண்ட்டரை நாளொன்றுக்கு 3,000 ரூபா குடுத்தும் வாடகைக்கு எடுக்க உங்களால முடியுமா? ஆனால், நம் மத்திய நிதியமைச்சரால் முடியும். ஏன்னா, எங்க ஆட்சில ஊழலே இல்ல. ஒன்லி டெவெலப்மென்ட், அச்சே தின்! # டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல்

- பிரபல எழுத்தாளர்

* சிம்பு ரசிகர் தீக்குளிக்கப் போறதா கேள்விப்பட்டதும் உன் போட்டோவ குடுத்து ஃப்ளெக்ஸுக்கு ஆர்டர் பண்ணிட்டேன். நீ என்னாடான்னா விசுவாசமே இல்லாம கூலா ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்க. ஷேம் ஆன் யூ நண்பா!

- பிரபல எழுத்தாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x