Last Updated : 07 Oct, 2015 11:32 AM

 

Published : 07 Oct 2015 11:32 AM
Last Updated : 07 Oct 2015 11:32 AM

சுட்டது நெட்டளவு: பறவையும், கிளையும்!

நன்றாக ஆட்சி செய்த சக்கர வர்த்தி ஒருவரின் கீழ் பல சிற் றரசுகள் இருந்தன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்தை சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார்.

அரசனுக்கு அந்தக் கிளிகளை மிகவும் பிடித்துப்போனது பறவை கள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பரா மரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட் டளையிட்டார்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? என்று தெரிந்துகொள்ள பயிற்சி யாளரை அழைத்தார் மன்னன்.

“அரசே… இரண்டு பறவை களில் ஒன்று நன்றாக பறக்க கற் றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றார். உடனே மன்னர், தனது நாட்டில் உள்ள பிர சித்தி பெற்ற கால்நடை மருத் துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளை இட்டார்.

அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர். உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்று கட்டளையிட்டார்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகை யிலிருந்து வெளியே பார்த்தார். கிளி அதே இடத்தில்தான் உட் கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலி ருந்தது.

‘இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரிய வில்லையே? விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந் திருக்க்கலாம்’ என்று கருதி னார். காவலர்களை அழைத்து, “கிராமப்புறத்துக்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயியை அழைத்து வா” என்று கட்டளையிட்டார்.

அடுத்தநாள் காலை கண் விழிக்கும்போது, அந்த பஞ்ச வர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தார். மன்னருக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றார்.

அவர்கள் ஒரு விவசாயியை மன்னர் முன் கொண்டுவந்து நிறுத்தினர்.

“எல்லோரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியை எப்படி பறக் கச் செய்தாய்?” என்று மன்னர் கேட்டார். அதற்கு விவசாயி, “அது ரொம்ப சுலபமான காரி யம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன் றுமில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x