Last Updated : 25 Sep, 2015 10:25 AM

 

Published : 25 Sep 2015 10:25 AM
Last Updated : 25 Sep 2015 10:25 AM

தெனாலிராமன் யோசனைகள்

ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிவது, ஆட்டோ மற்றும் பைக்கில் பயணம் செய்வது என்று பொதுமக்களை கவர பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். பொதுமக்களை கவர அவருக்கு மேலும் சில வழிகள்:

இருக்கிற தண்ணீர் பஞ்சத்தில் இப்போது தமிழக மக்கள் அதிகம் விரும்பும் வாகனம் தண்ணீர் லாரிதான். அதனால் பைக், ஆட்டோ ஆகியவற்றில் பயணம் செய்வதை விட தண்ணீர் லாரியில் பயணம் செய்தால் அதிகம் பேர் கவனிப்பார்கள். வாகனத்தை சுற்றி மாநாடு கணக்காக கூட்டமும் சேரும். அப்படியே வண்டியைச் சுற்றி நிற்பவர்களுக்கெல்லாம் ஒரு குடம் தண்ணீர் கொடுத்தால் அடுத்த தேர்தலில் கணிசமான வாக்குகளையும் அள்ளலாம்.

ராகுல் காந்தி ஸ்டைலில் கட்சிக்காரர்கள் சகிதம் ஏதாவது ஏழை வாக்காளர் வீட்டுக்கு போய் கஞ்சி குடிக்கலாம். இதனால் ஏழைப் பங்காளன் என்ற இமேஜ் உயரும். கூடவே உடன் வருபவர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் செலவும் மிச்சமாகும்.

இளைஞர்களை மகிழ்விப்பதற்காகத்தான் கலர் சட்டை போட்டு, ஸ்கூட்டர் எல்லாம் ஓட்டுகிறீர்கள். அப்படியே ‘கபாலி’, ‘பாகுபலி 2’ என்று மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களைப் பற்றிய எக்ஸ்குளூசிவ் தகவல்களை ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லலாம். இதைக் கேட்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். இதை வைத்து எதிர்க்கட்சிகளை பயமுறுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x