Last Updated : 12 Sep, 2015 09:28 AM

 

Published : 12 Sep 2015 09:28 AM
Last Updated : 12 Sep 2015 09:28 AM

ஒரு நிமிடக் கதை: எது அன்பு?

அன்பைப் பற்றி ஆனந்த் மேடையில் சொன்ன ஒவ்வொரு உவமைகளை யும், வர்ணனைகளையும் கேட்ட பார்வையாளர்கள், அரங்கமே அதி ரும்படி கைதட்டிக் கொண்டிருந் தார்கள்.

பார்வையாளர்களின் கைதட்டல் தந்த உற்சாகத்தில் ஆனந்துக்கு அவனையறியாமல் கருத்துக்கள் ஊற்றெடுத்துவர, பிரமாதமான உரையாற்றி முடித்தான்.

கூட்டம் முடிந்ததும், அரங்கத் தில் பலர் ஆனந்திடம் வந்து கைகுலுக்கி வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.

கூட்டத்திலிருந்து திடீரென்று ஆனந்தின் எதிரில் வந்த முதியவர் ஒருவர், “தம்பி, நல்லா பேசினீங்க. அன்பைப் பற்றி எவ்வளவு அழகா சொன்னீங்க. சுயநலம் பெருகிவிட்ட இந்தக் காலத்துல உங்களை மாதிரி அன்பைப் பற்றி எடுத்துச் சொன் னாதான் மற்றவங்களுக்குப் புரியும்..” என்று சொல்லிப் பாராட்டினார்.

“ஐயாவுக்கு எந்த ஊர்? என் பேச்சை இதுக்கு முன்னாடி கேட்டிருக் கீங்களா?” - கேட்டான் ஆனந்த்.

“இல்லை தம்பி.. நான் வெளியூர். வரன் பார்க்கிற விஷயமா இங்கே வந்தேன். எங்க ஊருக்கு ராத்திரி தான் பஸ். அதுவரைக்கும் நேரம் போகணுமேன்னு இங்கே வந்தேன்!”

“உங்க பொண்ணுக்கு மாப் பிள்ளை பார்க்கறீங்களா ஐயா?” -கேட்டான் ஆனந்த்.

“என் பொண்ணுன்னே வெச்சுக் கோங்களேன். என் அண்ணன் பொண்ணு. அண்ணன் சின்ன வயசுலயே விபத்துல போய்ட்டார். அவரோட ரெண்டு பொண்ணு, ஒரு பையன் எல்லாரையும் நான்தான் வளர்த்தேன். எல்லாரையும் படிக்க வெச்சு ஆளாக்கி, ரெண்டுபேருக்கு கல்யாணமும் பண்ணி வெச்சுட்டேன். கடைசி பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடிட்டிருக்கேன். மாப்பிள்ளை பையன் இந்த ஊர்லதான் டீச்சரா இருக்கார்னு தெரிஞ்சு பார்த்துட்டு போக வந்தேன். இனிதான் என் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியதைச் செய்யணும்” என்று பெரியவர் சொல்லிவிட்டு நகர்ந்து செல்ல, சுருக்கென்று இருந்தது ஆனந்துக்கு.

‘அண்ணன் பிள்ளைகளை தன் பிள்ளைகளாய் வளர்த்து ஆளாக்கிய இந்தப் பெரியவர் எங்கே? சொந்த அப்பா அம்மாவை என்னுடன் வைத்திருந்தால் சுதந்திரம் இருக்காது என்று, என்னைவிட வசதியற்ற தம்பியின் வீட்டுக்கு அனுப்பிவிட்ட நான் எங்கே? அன்பு என்பது மேடையில் பேசுவதற்கானதா? வாழ்க்கையில் நாம் காட்ட வேண்டிய உணர்வு அல்லவா?’ - யோசித்த ஆனந்த், மறுநாளே அம்மா, அப்பாவை தன்னுடன் அழைத்துவர தீர்மானித்தான்… கூடவே வெறுமனே அன்பு பற்றிய பேச்சைக் குறைத்துவிட்டு பொதுசேவையில் ஈடுபடுவதற்கும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x