Last Updated : 09 Apr, 2015 11:20 AM

 

Published : 09 Apr 2015 11:20 AM
Last Updated : 09 Apr 2015 11:20 AM

எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தனுக்கு ட்விட்டரில் கம்பீர அஞ்சலி

சமகால தமிழ் எழுத்தை தலைநிமிர வைத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு, வாசகர்கள் ட்விட்டரில் கம்பீரமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயகாந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட > #ஜெயகாந்தன் ஹாஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

ஞானபீடம் விருது பெற்றவரும், தனது கதைகளாலும் கட்டுரைகளாலும் தமிழ் வாசக நெஞ்சங்களில் கம்பீரமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தவருமான ஜெயகாந்தன் புதன்கிழமை இரவு மறைந்தார். | விரிவான செய்திக்கு ->இலக்கிய பிதாமகனை இழந்தோம்! |

தமிழ் சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஜெயகாந்தனின் மறைவுக்கு ட்விட்டரில், அவரது வாசகர்கள் இரங்கல் தெரிவித்து, அவரை கம்பீரமாக நினைவுகூரும் குறும்பதிவுகளை பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

ஜெயகாந்தன் புகழ்பாடும் குறும்பதிவுகள் #ஜெயகாந்தன் எனும் ஹாஷ்டேகுடன் பகிரப்பட்டு வருகின்றன. அந்தக் குறும்பதிவுகளில் சில:

ட்விட்டர்MGR @RavikumarMGR - உயிர் எழுத்து இறந்துவிட்டது.

Nagarajan @nagakadhir - ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்தது. அந்த சிங்கத்தின் பெயர் ஜெயகாந்தன்.

கர்ணாசக்தி @karna_sakthi - மீசை வைத்த சிங்கத்தின் ஆத்மா சாந்தியடையட்டும்...

தன லட்சுமி @DHANALA09046794 - எழுத்துலகின் சிம்மம் சாய்ந்தது.

மணிமைந்தன் @ManiMaindhan - சமகால தமிழ் இலக்கியத்தின் ஆளுமை #ஜெயகாந்தன் ஆத்மா சாந்தியடையட்டும்.

நிலாவன் @nilaavan - சிங்கம்னு சொல்றதுக்கான சரியான பிம்பம்... @nilaavan

புகழ் @mekalapugazh - பேராண்மை...எழுத்தும் உருவமும் #ஜெயகாந்தன்

The Stallion @StallionMano - சில நேரங்களில் சில மனிதர்கள். எப்பொழுதும் ஒரே மனிதன்.

Karthik Venkatesan @kartik_void - இலக்கிய சிங்கம் மறைந்தது.

கரிகாலன் ‏@appanasivam - சமூக அவலங்களை முகத்திலறைந்த அவரின் கதைகள் காலக்கண்ணாடி. ஆழமும் விரிவும் மிக்க சிறுகதைகளின் முன்னோடி. தமிழ் உள்ளவரை நீர் வாழ்வீர் #ஜெயகாந்தன்

rafidr ‏@rafidr1982 - அவர் எழுதவில்லை 25 ஆண்டுகளாக ,அவள் குழந்தை பெற்று ஆனது 25 ஆண்டுகள், அவர் மாபெரும் எழுத்தாளர்தான், அவள் அன்பான அம்மாதான். #ஜெயகாந்தன்

அலெர்ட் ஆறுமுகம் ‏@6_mugam - எழுத்து ஒரு பக்கம் இருந்தாலும் முறுக்கு மீசை முன் உதாரண மனிதர்களின் இழப்பு ஒரு வித வருத்தத்தையே தருகின்றது #ஜெயகாந்தன்

இதேபோல், மற்றொரு வலைதளமான ஃபேஸ்புக்கிலும் > #ஜெயகாந்தன் குறித்த பதிவுகள் வெகுவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

| காந்தக் குரலால் ரசிகர்களை கவர்ந்த பாடகர் நாகூர் ஹனிபா மறைவையொட்டி, அவருக்கும் ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அது குறித்த பதிவு - ' >இசை முரசு' நாகூர் ஹனிபாவுக்கு ட்விட்டரில் புகழஞ்சலி |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x