Published : 11 Jun 2016 05:17 PM
Last Updated : 11 Jun 2016 05:17 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஏழு தமிழர்களை ஏழு மனிதர்களாக கருதுவீர்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்றது. அற்புதம்மாள் தலைமையில் சென்னை - எழும்பூரில் தொடங்கிய இந்தப் பேரணி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் முடிவடைந்தது. இந்த பேரணி குறித்து நெட்டிசன்கள் பகிர்ந்த உணர்வுபூர்வ பதிவுகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

>சுமேசு தமிழன்

விரைவில் தெறிக்கட்டும் விடுதலைக்கான விலங்குகள் ! #Release7Innocents

>SKP Karuna ‏

பேரறிவாளன் விடுதலையைக் கோரும் பயணத்தில் கலந்து கொள்வோருக்கு எனது நன்றிகளும், வாழ்த்துகளும். நியாயமான கோரிக்கைக்கான லட்சியப் போராட்டம்.

>நவாலியூர் தீ

25 வருட சிறை வாழ்வுக்கு முடிவு தேடி அற்புதம்மாள் தலைமையில் பேரணி.

>Vairamuthu ‏

வாகனப் பேரணி சிறக்கட்டும் - சிறை

வாயிலின் கதவு திறக்கட்டும் - எங்கள்

அறிவு விடுதலையாகி பறக்கட்டும்.

>நவாலியூர் தீ

நிரபராதிகள் எழுவர்..

நிர்க்கதியாக நாம்...

ஏற்குமா அரசு?

ஏங்குறோம் நாம்..

வாகன பேரணி

>Joe Selva ‏

என்ன தான் அற்புதம்மாள் பேரணி நடத்தினாலும் மத்திய அரசு நிலையில் மாற்றம் இருக்காது.

>இனவாதி

25 வருட சிறை வாழ்க்கையை விட இவர்களுக்கு மேலான தண்டனை ஏதும் இருக்கமுடியாது.

>பரமேஸ்வரன்

அந்த ஏழுபேரும் மலையாளிகளாகவோ அல்லது வட இந்தியர்களாகவோ இருந்திருந்தால் நிலைமையே வேறுமாதிரியாக இருந்திருக்கும்!

>இனவாதி

வரலாற்று பெருமை பேசும் நம்மால் முடியாத விஷயமாக இன்றுவரை இருப்பது எழுவர் விடுதலை.

>Packiarajan

9 volt battery பில் வைத்திருந்ததாக கைதுசெய்யப்பட்டு 25 வருட சிறைக்கு பின் வழக்கு எழுதிய அதிகாரி சொல்கிறார்

நிரபராதியென்று.

>Dr S RAMADOSS

பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு: இனியும் தொடரக்கூடாது சிறைக்கொடுமை. 7 தமிழர்களை விடுதலை செய்க!

>பவன் ‏மறுக்கப்பட்ட நீதிக்கான கால் நூற்றாண்டு கால போராட்ட வரலாறு! #அற்புதம்மாள்

>சசிலி தானா ‏

ஏழு தமிழர்களாக இல்லாவிடினும் ஏழு மனிதர்களாகவேனும் கருத்தில் கொள்ளுங்கள்

>தமிழன் நெஸ்டர்

கால் நூற்றாண்டு கண்ணீரை துடைத்தெறிய கரம் கோர்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x