Published : 29 Jul 2016 09:59 AM
Last Updated : 29 Jul 2016 09:59 AM

சிலை சிலையாம் காரணமாம் -17: சிங்கமுக பிரத்தியங்கரா தேவி!

அர்த்தநாரீஸ்வரருடன் விருத்தாச்சலம் கோயி லில் இருந்த சிங்கமுக பிரத்தியங்கரா தேவி கற்சிலை யும் அதே சமயத்தில் கடத்தப் பட்டது. இந்த இரு சிலை களைக் கடத்தியதன் பின்னணி யில் தீனதயாள் இருப்பதாகச் சந்தேகிக்கும் தமிழக போலீஸ், இந்தச் சிலைகள் மும்பை துறை முகம் வழியாக ஆஸ்திரேலி யாவுக்குக் கடத்தப்பட்டதாகச் சொல்கிறது.

பிரத்தியங்கரா சிலையை 1971 ஆகஸ்ட் 12-ல் டெல்லியில் ‘கங்கா ஆர்ட் பேலஸ்’ என்ற கலைப் பொருள் விற்பனைக் கடையில் இருந்து அப்துல்லா மெஹூப் வாங் கியதாகவும், அதை அவர் தனது மகள் செலினா முகம்மதுக்கு 1990-ல் விற்றதாகவும் செலினா விடம் இருந்து அதை கபூர் வாங்கியதாகவும், வழக்கம் போல போலியான ஆவணங்களைத் தயாரித்து வைத்திருக்கிறார்கள். ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் உள்ள பிரத்தியங்கரா சிலை விருத் தாச்சலம் கோயிலுக்குச் சொந்த மானது என்பதும் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் ஆவணப்படங்கள் மூலமே உறுதிசெய்யப்பட்டது. அர்த்தநாரீஸ்வரர் கடத்தப் பட்டதற்கு 11 ஆண்டுகள் கழித்து வழக்கு பதிவுசெய்த போலீஸ், பிரத்தியங்கரா சிலை கடத்தப்பட்டதற்கு இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.

கோயில் சிலைகள் திருட்டு வழக்குகள் அனைத்தையுமே சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி.) பிரிவு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை. ஐம்பொன் சிலைகளாக இருந்து அவை 5 லட்ச ரூபாய் (1995 ஆண்டின் மதிப்பீடு) மதிப்புக்கு மேல் இருந்தால் மட்டுமே சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி.) பிரிவு விசாரிக்கும். கற்சிலைகள் திருட்டு வழக்கை இந்தப் பிரிவு விசாரிக்காது என்றாலும் முக்கிய மான வழக்காக கருதி அரசு தரப்பில் இருந்து சிறப்பு உத்தரவுகள் வந்தால் தங்கள் வரம்புக்குள் வராத சிலைத் திருட்டு வழக்குகளையும் இந்தப் பிரிவு விசாரிக்கும். சிலைக் கடத் தல் தடுப்புப் பிரிவின் விசாரணை வரம்புக்குள் வராத வழக்குகளை அந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸார்தான் வழக்கு பதிவுசெய்து விசாரிக்க வேண்டும்.

வழக்குப் பதிய மறுக்கும் போலீஸார்

பழமையான கோயில்களில் உள்ள கற்சிலைகள் குறித்து உள்ளூர்வாசிகளுக்கு போதுமான புரிதல் இருப்பதில்லை. அதே சமயம், கோயில் சிலைகள் காணாமல் போய்விட்டதாக உள்ளூர் பிரமுகர்கள் தரும் புகார்கள் மீது, காவல் துறையினர் அவ்வளவு எளிதில் வழக்கும் பதிவு செய்வதில்லை. வழக்கு பதிவு செய்தால், காணாமல் போன சிலையைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதாலேயே, ஏதாவது காரணங்களைச் சொல்லி வழக்கு பதியாமல் தட்டிக் கழித்து விடுகிறார்கள். இதுவும் சிலைக் கடத்தல் பேர்வழிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

இந்த விஷயத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறுகிறார் கங்கை கொண்ட சோழ புரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலை வர் பொறியாளர் கோமகன். ‘‘அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஊர் நடுவே நாச்சியார்குளம் உள்ளது. அந்தக் குளத்தைப் பற்றி நானும் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் இல.தியாகராஜனும் கடந்த ஆண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். அப்போது, நாச்சியார்குளக் கரையில் இருந்த அம்மன் சிலையானது செல்லியம்மன் கோயிலில் கைவிடப்பட்ட நிலையில் இருப் பதைக் கண்டுபிடித்தோம்.

திருடுபோன கங்கைகொண்ட சோழபுரம் சிலை

அதுகுறித்து அப்போதே மீடியாக்களில் பதிவு செய்தோம். அடுத்த இரண்டு நாட்களில் அந்த அம்மன் சிலையும் இன்னும் சில சிலைகளும் அங்கிருந்து காணாமல் போய்விட்டன. இது குறித்து ஊராட்சி தலைவர் மூலமாக போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனால், எஃப்.ஐ.ஆர். போட மறுத்துவிட் டது போலீஸ். தப்பித் தவறி, திருடுபோன சிலையை போலீஸ் கண்டுபிடித்தாலும் இதுதான் உங்களுடைய சிலை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட் கிறார்கள்.

இந்தச் சிக்கலைக் போக்க தமி ழகத்தின் அனைத்து பழமையான கோயில் சிலைகள், புராதனச் சின்னங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அரசிடமும் அந்தந்தக் கோயிலிலும் முறையான பதி வேடுகள் பராமரிக்கப்பட வேண் டும். அத்துடன், கோயில்களில் உள்ள சிலைகள் பற்றிய விவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்போதுதான், சர்வ தேச கலைப் பொருள் சந்தை யில் திருட்டுச் சிலைகளை வாங்குவதற்கு யோசிப்பார்கள்’’ என்கிறார் கோமகன்.

கோமகன் சொல்வதுபோல தமிழகத்தில் அறநிலையத் துறை கோயில்களுக்குச் சொந்தமான 25 ஆயிரம் ஐம்பொன் சிலைகள் பற்றிய முழுவிவரங்கள் ஒருமுறை முழுவீச்சில் ஆவணப்படுத் தப்பட்டன.

அது எப்போது தெரியுமா?

- சிலைகள் பேசும்.. | IFP/EFEO - புதுச்சேரி, ‘The India Pride Project’ உதவியுடன்..

முந்தைய அத்தியாயம்: > சிலை சிலையாம் காரணமாம் -16: அர்த்தநாரீஸ்வரர் கடத்தப்பட்டதன் பின்னணி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x