Last Updated : 13 Jan, 2017 03:01 PM

 

Published : 13 Jan 2017 03:01 PM
Last Updated : 13 Jan 2017 03:01 PM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 23: எதிர்க் கட்சியினரோடு ஒரு மாலை!

“சந்திரிகாவிடம் நான் கறா ராகக் கூறிவிட்டேன்; பிரச்சினை யைத் தீர்க்க இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே அவகாசம் தருவேன். பிரச்சினையைத் தீர்க்க என்னுடைய ஆதரவையும் தருவேன். பிரச்சினை யைத் தீர்க்க முடியாவிட்டால் அரசை என்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும், பிரச்சினைகளை நான் தீர்ப்பேன்” என்று இலங்கையில் 2000-வது ஆண்டு எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரம சிங்கே, விருந்து மேஜையில் இருந்த மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந் ததை கேட்டபடியே நடந்து சென்றேன்.

மெட்றாஸ் நகரில் சில நாட்களுக்கு மட்டுமே தங்கியிருக்க வந்திருந்தபோது விருந்து நிகழ்ச்சியில்தான் அவரைப் பார்த்தேன். அவரும் அவருடைய ஆலோசகர்களும் அமர்ந்திருந்த மேஜையில் பேச்சு இந்த திசையில்தான் சென்றுகொண்டிருந்தது. இலங்கையில் நடந்துகொண்டிருந்த சோக சம்பவங்கள் குறித்து அக்கறை கொண்ட பலர் அவர்கள் பேசுவதை மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண் டிருந்தனர். ஆனால், அவர்கள் பேசி யதில் எதுவும் புதிது இல்லை என்று அவர்களுடைய முகங்கள் காட்டின. அங்கே வித்தியாசமாக ஏதாவது இருந்தால் அது விக்ரமசிங்கேவின் பேச்சுதான்.

“தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தின் தெற்குப் பகுதி மற்றும் இலங்கை என்கிற நான்கு பிரதேசங்களுக்கும் சேர்த்து பொதுவான சந்தையை ஏற்படுத்த வேண்டும். அது தடையற்ற முதலீட்டு மண்டலமாக இருக்க வேண்டும். இந்திய இலங்கை தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் சீரமைத்த பிறகு இதை மேற்கொள்ள வேண்டும். 7-வது நூற்றாண்டில் மானவம்மா என்ற இலங்கை மன்னன் காலத்தில் தென்னிந்தியாவுடன் இலங்கைக்கு இருந்த நெருக்கம் இப்போது மீண்டும் ஏற்பட வேண்டும்” என்றார் விக்ரமசிங்கே. மானவம்மாவின் பெயரை விக்ரமசிங்கே ஏன் குறிப்பிட்டார் என்று பார்க்க வேண்டும். இந்த மானவம்மாதான் பாண்டியர்களையும் பல்லவர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு சோழர் களுக்கு எதிராகப் போரிட்டு அவர் களுடைய கட்டுப்பாட்டில் இருந்து இலங்கையின் சிங்கள அரசுக்கு விடுதலை பெற்றுத் தந்தான். டெல்லிக்குச் செல்வதற்கு முன்னால் மெட்றாஸ் விருந்தில் மானவம்மா பெயரைத் தேவையில்லாமல் விக்ரம சிங்கே உச்சரித்திருக்க மாட்டார். இதற்குப் பின்னால் இருந்த நோக்கம் என்ன என்று பார்க்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த இன்னொரு தகவல், விக்ரமசிங்கேவுக்கு செய்தித்தாள் களுடன் இருந்த தொடர்பு பற்றியது. அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர்தான் இலங்கையின் மிகப் பெரிய பத்திரிகைக் குழுமமான ‘லேக்-ஹவுஸ் நியூஸ் பேப்பர்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தக்காரராக இருந்தார். பின்னாளில் அது தேசியமயமாக்கப்பட்டது. அந்த உறவினர்கள் ‘தி டைம்ஸ் ஆஃப் சிலோன்’என்ற பத்திரிகைக் குழுமத்தை மீண்டும் உயிர்ப்பிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தது. அதைக் கேட்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதிகரித்த சோகம்

‘லேக் ஹவுஸ்’ குழுமத்தின் ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் நான் பணியாற்றி யிருக்கிறேன். ஆனால் ‘டெய்லி டைம்ஸ்’ பத்திரிகையை மீண்டும் தொடங்கும் எண்ணமில்லை என்பதும் சோகம் கப்பியது. ‘தி டைம்ஸ் ஆஃப் சிலோன்’ போலவே, மாலைப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்த ‘தி அப்சர்வர்’ மூடப்படப்போகிறது என்று கேள்விப்பட்டதும் சோகம் மேலும் அதிகரித்தது. தெற்காசியாவின் மூத்த பத்திரிகைகளில் அதுவும் ஒன்று. ‘தி அப்சர்வர்’, ‘தி டைம்ஸ்’ என்ற இரு பத்திரிகைகளும் அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களை நூறாண்டுகளுக்கும் மேல் நடத்தி யுள்ளன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மிகவும் அருகில் இருந்து அவற்றின் செயல்பாட்டைக் கவனித்து வந்தவன்.

மெட்றாஸ் மாகாணத்தில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழும் ‘தி மெயில்’ என்ற ஆங்கில மாலை நாளிதழும் அப்படி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடியுள்ளன. ‘தி இந்துவின் நூறாண்டுகள்’ என்கிற நூலில் இவை யெல்லாம் மிகவும் விரிவாக இடம் பெற்றுள்ளன. இதழியல் என்பது இப்போது மிகவும் அமைதியான காலத்தில்தான் இருக்கிறது.

கற்றுத் தர விருப்பம்

ஒரு நாட்டின் அரசியல், ராணுவ நிகழ்வுகளைப் பற்றிய பேச்சில் இருந்து விடுபட விரும்பி முழுக்க முழுக்கப் பெண்களே அமர்ந்திருந்த மேஜைக்குச் சென்றேன். விக்ரமசிங்கேவின் மனைவி கேளனியப் பல்கலைக்கழகத்தில் கலைப் பாடப் பிரிவில் விரிவுரையாளராக இருந்தார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் படிப்பை மாணவர் களுக்கு ஆங்கிலத்தில் எப்படிக் கற்றுத் தருகிறார்களோ, அதே போல இலங்கை யிலும் கற்றுத் தர விரும்புவதாக அவர் தெரிவித்தார். அது தொடர் பான விவரங்களைத் தருமாறு அங்கிருந்தவர்களிடம் கேட்டார். இலங்கை தென்னிந்திய வர்த்தகத் தொடர்பை விரும்பிய கணவரைப் போல அவரும் இந்தக் கல்வித் தொடர்பை விரும்பினார்.

ஆலோசகர் மொரகுடாவின் மனைவி ஜெனிஃபர், அமெரிக்காவின் கலி ஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந் தவர். அவரோ கேரளத்துக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு கள் பற்றி அறிவதில் ஆர்வம் செலுத் தினார். ஏற்கெனவே ஒருவர் அப்படி ஆராய்ந்து தகவல்களைத் திரட்டி யிருக்கிறார் என்று கேள்விப்பட்டதுமே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இலங்கை யில் ஆயிரக்கணக்கில் வசிக்கும் குரூப்புகள், ஈழவர்கள் குறித்து கேரள அரசில் தலைமைச் செய லாளராகப் பணியாற்றிய சங்கர நாராயணன் டாக்டர் பட்டம் பெற, பெரிய ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதியிருக்கிறார். இலங்கையின் மேற்குக் கரையில் வசிப்பவர்களுக்கும் கேரளத்தவருக்கும் இடையில் வாழ்க்கை முறையில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிழக்குப் பகுதியில் நெல் சாகுபடியானது கேரளத்தில் உள்ளதைப் போலவே கையாளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இவை போன்ற தகவல்கள் பலவற்றை மேலும் அறிய ஜெனிஃபர் ஆர்வம் காட்டினார்.

- சரித்திரம் பேசும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x