Published : 13 Aug 2016 10:41 AM
Last Updated : 13 Aug 2016 10:41 AM

சிலை சிலையாம் காரணமாம் - 28: சோழன் காலத்து அரிய மரகத லிங்கம்

குஜராத் காலிக்கோ மியூ சியத்தில் உள்ள ராஜ ராஜன் லோகமாதேவி சிலைகள் குறித்தும், அதை மீட்டு வர எடுக்கப்பட்ட முயற்சி கள் குறித்தும் இந்தத் தொடரில் குறிப்பிட்டிருந்தோம். அந்தச் சிலைகள் குறித்து இரு மாறு பட்ட கருத்துக்களைப் பதிவிட் டிருக்கும் தொல்லியல் அறிஞர் நாகஸ்வாமி, ‘‘அந்தச் சிலைகள் தஞ்சை பெரிய கோயிலில் இருந் த தற்கான ஆதாரமும் இல்லை. அது அங்கிருந்து காணாமல் போய்விட்டதாக எந்தப் புகாரும் இல்லை’’ எனத் தெரிவித்திருந் தார். இதைப் படித்துவிட்டு ‘தி இந்து’ அலுவலகத்துக்கே நேரில் வந்துவிட்டார் தமிழக அறநிலையத் துறையின் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்.

ராஜராஜன் சிலைகுறித்து விரிவாகப் பேசிய சுவாமிநாதன், ‘‘ராஜராஜன் சிலை தங்கத்தால் ஆனது என காஞ்சி சங்கராச் சாரியாரே ஒருமுறை என்னிடம் தெரிவித்தார். பிரபல அணு விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் மனைவியும், தமிழக முன்னாள் அட்வகேட் ஜெனரல் கோவிந்த் சுவாமிநாதனின் தங்கையுமான, பரதநாட்டிய கலைஞர் மிருளா ளிணி சாராபாய்க்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் அந்தச் சிலை இருப்பதாகச் சொல் லப்பட்டது. இதையடுத்து 1986-ல், தஞ்சையில் இருந்த அந்த ராஜ ராஜன் சிலை காணாமல் போயிருப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அறநிலையத் துறை செய லாளருக்கு புகாராகவே எழுதினேன். ஆனால், அது தொடர்பாக முறையான நட வடிக்கை எடுக்காமல் அதி காரிகள் இழுத்தடித்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு அரசியல் சூழல் மாறிவிட்டதால், என்னால் தொடர்ந்து கண்காணிக்க முடிய வில்லை. அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கிறது என்பதை ‘தி இந்து’வைப் படித்த பிறகு தான் அறியமுடிந்தது. சிலை காணாமல் போனதாக அமைச்சரா கிய நான் புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அது தொடர்பாக நடவடிக்கை எடுக் காதது மாபெரும் குற்றம். இதற் குக் காரணமான அதிகாரிகளை யும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பதுடன், சிலைகளை மீட்டு வரவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்தச் சிலைகள் குறித்து புரண்டு பேசும் நாகஸ்வாமி, இந்த விஷயத்தில் தீர்ப்புச் சொல் லத் தகுதியில்லாதவர். எனவே, அவரை ஒதுக்கிவிட்டு, உண்மை யிலேயே அக்கறை கொண்ட நிபுணர்களையும் அதிகாரிகளை யும் குஜராத் அனுப்பி, நமது சிலை களை மீட்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர், அறநிலையத் துறைச் செயலாளர் உள்ளிட்டோருக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன்’’ என்று சொன்னார்.

கபூருக்கு சான்றளித்த தமிழக நிபுணர்

வெளிநாட்டு ‘ஆர்ட் கேலரி’கள் மற்றும் மியூசியங்களில் கபூர் சம் பந்தப்பட்ட கடத்தல் சிலைகள் சிலவற்றுக்கு, சோழர் கால சிலைகள் சம்பந்தப்பட்ட தமிழகத் தைச் சேர்ந்த பிரபல ‘சோழா பிராண்ட்’ நிபுணர் ஒருவர் அளித் திருக்கும் சான்றையும் ஆவண மாக வைத்திருக்கிறார்கள். குறிப் பிட்ட அந்தச் சிலைகள் குறித்து அந்த நிபுணரின் கபூர் ஆர்ட் கேலரி நிர்வாகம் தகவல் கேட்டதாகவும், அதற்கு அவர், ‘இந்து சோழர் காலத்துச் செப்புத் திருமேனிதான் என்றும், இதுகுறித்த சர்ச்சைகள் எதுவும் இல்லை என்றும் தொலைபேசியில் வாய்மொழிச் சான்று அளித்ததாகவும் ‘ஆர்ட் கேலரி’ நிர்வாகம் ஆவணம் வைத் திருக்கிறது. அந்த ஆவணத்தின் நகல் நம்மிடமும் இருக்கிறது.

அந்தப் பிரபல நிபுணர் சான்று அளித்திருப்பதன் மூலம் அந்தச் சிலையின் மதிப்பு கூட்டப்பட்டிருக்கிறது. ‘‘அந்தச் சிலையைப் பற்றி தன்னிடம் கேட்டதுமே ‘இது தமிழகத்தைச் சேர்ந்த பழமையான சோழர் கால சிலை ஆயிற்றே; இது எப்படி அமெரிக்காவுக்குப் போனது?’ என்று அந்த நிபுணர் கேள்வி எழுப்பவில்லை. இங்கிருந்து கடத்தப்பட்ட நமது சிலை தற் போது அமெரிக்காவில் இன்னா ரிடம் இருக்கிறது என்ற விவரத் தையும் அந்த நிபுணர் தொல்லி யல் துறைக்கோ, போலீஸுக்கோ தெரிவிக்காதது ஏன்?’’ எனத் தொல் லியல் துறை சார்ந்தவர்களே கேள்வி எழுப்புகிறார்கள்.

திருத்துறைப்பூண்டியில் உள்ளது பிறவி மருந்தீஸ்வரர் கோயில். இங்கு, 990 கிராம் எடையுள்ள, குலோத்துங்க சோழன் காலத்து அரிய மரகத லிங்கம் (விடங்கர்) இருந்தது. 19.02.2009-ல் கோயில் ஜன்னலை அறுத்து இந்த லிங்கம் கொள்ளை யடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ், வலங்கைமானைச் சேர்ந்த செந்தில் ஆகிய இருவரை 25.10.2009-ல் சென்னையில் போலீஸ் கைது செய்தது.

நீடூரைச் சேர்ந்தவர் விஜி. இவர் வேறொரு வழக்கில் திருச்சி சிறையில் இருந்தபோது, சிலை திருட்டுக் கும்பலைச் சேர்ந்த வேதாரண்யம் வைத்தியலிங்கத்துடன் பழக்க மாகியிருக்கிறார். அப்போது, மரகதலிங்கத்தைக் கொண்டு வந்தால் 50 கோடி ரூபாய்க்கு அதை விற்றுத் தருவதாக விஜியை உசுப்பேற்றியுள்ளார் வைத்தியலிங்கம்.

இதையடுத்து, ஜாமீனில் வெளியே சென்றதும் திருத் துறைப்பூண்டி கோயிலின் மரகத லிங்கத்தை கடத்தத் தீட்டம் தீட்டு கிறார் விஜி. இந்த வேலையில் மெர்லின் என்பவரையும் அவ ரது கூட்டாளிகளையும் ஈடுபடுத் திய விஜி, இதற்கு முன்பணமாக 2.5. லட்ச ரூபாயை மெர்லி னுக்குக் கொடுக்கிறார். பக்கா வாக திட்டம்போட்டு மரகத லிங்கத்தைக் கடத்திய மெர்லின், அதை காலி எரிவாயு சிலிண்டருக்குள் வைத்து அடைத்து, தனது வீட்டருகே புதைத்து வைத்துவிட்டார். பிறகு, அதை ரமேஷ் மூலமாக விஜியிடம் ஒப்படைத்தார். இந்த வழக்கை விசாரித்தபோது விடை தெரியாமல் இருந்த இன்னொரு புதிருக்கும் விடை கிடைத்தது.

- சிலைகள் பேசும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x