Published : 24 Sep 2018 06:14 PM
Last Updated : 24 Sep 2018 06:14 PM

குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ

பொதுவாக காரில் பயணிக்கும் நபர்கள் உள்ளே இருக்கும் குப்பைகளை எடுத்து சாலையில் வீசுவது இயல்பாக நடக்கிற சம்பவங்களில் ஒன்று. அப்போது போக்குவரத்து காவலர்களிடம் மாட்டிக் கொண்டு திட்டு வாங்குபவர்கள் உண்டு. அபூர்வமாக அபராதம் கட்டியவர்களும் உண்டு.

சீன நாட்டின் பெய்ஜிங்கில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது. அங்கே டிராபிக் சிக்னலில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. சில நொடிகளில் காரின் கதவு திறக்கப்பட்டு, காரை ஓட்டிவந்த பெண் உள்ளே இருந்தபடி, குப்பையை சாலையில் வீசினார்.

அதைப் பார்த்த இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பெண், கார் ஓட்டுநருக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்தார். கீழே வீசப்பட்ட குப்பையைத் தன் கையால் எடுத்த இருசக்கர வாகனப் பயணி, அதை மீண்டும் காருக்குள்ளேயே வீசினார்.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர், கீழே இறங்கி எதையோ சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத பெண், வண்டியைக் கிளப்பிக் கொண்டு சீறிப் பாய்கிறார்.

இணையத்தில் இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. இதைச் சீனாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x