Published : 28 Sep 2018 01:01 PM
Last Updated : 28 Sep 2018 01:01 PM

நெட்டிசன் நோட்ஸ்: சபரிமலை தீர்ப்பு - பெண்ணும் தீட்டல்ல, பெண்ணின் உதிரமும் தீட்டல்ல!

கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Darwin Geo

‏#Sabarimala அடிப்படை உரிமையை பறிக்கும் எந்த ஒரு சடங்கு , சம்பிரதாயங்களும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது, அப்படிப்பட்டவை ரத்து செய்யப்பட வேண்டும்.

அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்கள் அனைத்தும் தீண்டாமைக்கு நிகரானது.

REGINA

‏பெண் உரிமை என்பதை இன்றைய தீர்ப்பு பூர்த்தி செய்து விட்டது...

BHARATHCHANDRAN

‏அரசியலமைப்பு ஏற்கப்பட்டு 68ஆண்டுகள் ஆன பின்பு,அது அளித்த அடிப்படைஉரிமையை நிலைநாட்டும் விதமாக, பெண்களை #சபரிமலை யில் அனுமதித்தது,கால தாமதமான நீதியானாலும்,தற்போதெனும் அளித்த நீதிதுறைக்கும், நீதியரசர்களுக்கும் நன்றி, தீட்டு என்றோரின் மதி இத்தீர்ப்பால் கூர்தீட்டப்படட்டும்.

Vicky AV

‏இன்றைக்கு வித்தியாசமாக அல்லது முகம் சுளிக்க வைக்கக்கூடியதாக அமையும் மாற்றங்கள் நாளை சாதரணமாகிப்போகலாம் !

இன்றைக்கு இருப்பவர்கள் புலம்புவார்கள் நாளைக்கு வருபவருக்கு அது என்னவென்று கூட தெரியாமல் போகும் ! அதுதான் இயற்கையின் நீதி !

Pattusamy.G

‏வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!

பெண்ணுரிமை போற்றுவோம்...

அமரன்

மதம் என்ற போர்வையில் இன்னும் பெண்கள் மீது திணிக்கப்படும் சம்பிரதாயங்களுக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி தீர்ப்பு

Vishnu Varatharajan

‏#Sabarimala தீர்ப்பு கலவையான உணர்வுகளைத் தந்திருக்கிறது

KavinKSS

‏தர்மத்தின் வாழ்வுதனை

சூதுகவ்வும் தர்மம்

மறுபடியும் வெல்லும்

Surya Born To Win

‏பெண்ணும் தீட்டல்ல, பெண்ணின் உதிரமும் தீட்டல்ல!

 - தந்தை பெரியார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x