Published : 14 Sep 2018 12:52 PM
Last Updated : 14 Sep 2018 12:52 PM

நெட்டிசன் நோட்ஸ்: சீமராஜா - போதும்டா ராஜா

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிமரன், சூரி, நெப்போலியன்  ஆகியோர் நடிப்பில் 'சீமராஜா' திரைப்படம் இந்தவாரம் வெளிவந்துள்ளது.  இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்.....

தினேஷ் ராம்

‏அடுத்து, நேரா உலகத்தைக் காக்குற சூப்பர் ஹீரோ கதை தான் பங்கு! பில்டப்ஸ் ஆஃப் லோக்கல் எல்லாம் இல்ல; இனி நான் நேரா ஏலியன்ஸ் கூடத்தான் பஞ்சாயத்து செய்வேன். ஆங்.!

கெட்ட பய

‏விஜய்க்கு ஒரு புலி

அஜித்துக்கு ஒரு விவேகம்

விக்ரம்க்கு ஒரு ராஜபாட்டை

சூர்யாவிற்கு ஒரு அஞ்சான்

வி.சேதுபதிக்கு ஒரு ஜூங்கா

அதே மாதிரி

சிகாக்கு சீமராஜா அப்படினு சொல்லிட்டுப் போங்கடா !!!!!

musica

‏சீமராஜா, செம்ம entertainer, படம் நெடுகிலும் தூவி தூவி சிரிக்கிறாப்ல நிறைய சீன்ஸ், வ.வா.ச போல இன்னும் நிறைய காமடி இருந்துருக்கலாம்

சூரி சிகா- இன்னும் கொஞ்ச நாளைக்கு அசைக்க முடியாத சோடி. அந்த six packs

நெப்போலியன் கம்பீரம்

Cinematography பக்கா. பாடல் காட்சிகள் அழகு

 கெட்ட பய

‏நேற்று #சீமராஜா பார்க்க நேர்ந்தது இங்க நிறைய பேர் சொல்ற அளவுக்கு அவளோ மோசம் இல்லை என்பது என்னோட கருத்து

ஒரு தடவை பார்க்கலாம். போர் அடிக்கலை. அண்ட் பேமலி ஆடியன்ஸ்க்கு கண்டிப்பா படம் புடிக்கும். தப்பிச்சிடும்.

ramkumar

‏எல்லா நடிகர்களுக்கும் அடுத்த ரஜினிகாந்த் தான் தான் என்ற நினைப்பு வந்து விட்டால் என்ன நடக்கும் என்பதை சிவகார்த்திகேயன் சீமராஜா மூலமாக மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

THE ROCKSTAR AK™      

‏கேவலமான ரைட்டிங்..மாஸ்னு நெனச்சு எழுதின சீன பாத்து கூஸ்பம்ப் வரல.. காமெடிக்கு சிரிப்பு வரல..ம்யூஸிக் மொக்க.. பாட்டு மொக்க..பாட்டு-சீன்ஸ்ல இருக்கற ஓவர் ஹீரோ துதி..வீக்கான பாத்திரப்படைப்புனு #சீமராஜா நாம யூகிச்சே பாக்கமுடியாத அளவுக்கு மோசமா இருக்கு..

Karthikeyan.D

 சீமராஜா நல்ல பொழுதுபோக்கு படம்

Hariharan k

‏சிவகார்த்திகேயன் திரைப்பட வாழ்வில் #சீமராஜா சறுக்கல் மிகுந்த படமாக அமைந்துள்ளது.

Bibin Raj   

‏சிவகார்த்திகேயன் படத்தில் காமெடி இருக்கும் என்று ரொம்ப எதிர்பார்ப்போட படம் பார்க்க ஆரம்பித்தேன்.

கடைசிவரை ஒரு இடத்தில் கூட சிரிப்பே வரல. படமும் அப்படி ஒண்ணும் ரசிக்கிறமாதிரி இல்ல..!

masilan

‏ஆண்ட பெருமை + சிவகார்த்திகேயன் + முட்டாள் சமூகம் = டெட்லி கலவை. பழம்பெருமை பேசி நாசமா போற அவல நிலை.

ஜிம்பலக்கடி பம்பா 

‏பேர் சிவகார்த்திகேயன்: ஆமாங்க

உங்க மேல சிலர்க்கு பொறாமை இருக்கு: ஆமாங்க

உங்க புரொடியூசர்க்கு கார் கூட இல்ல: ஆமாங்க

கமர்ஷியல் ஹீரோ ஆவணும்னு ஆசை: ஆமாங்க 

அதுக்கு இன்னும் பல படம் நடிக்கணும் 10 படத்துலயே எல்லாத்தையும் ஓவர்டேக் செய்யணும்னு நெனச்சா அப்புறம் ராமராஜன் கதிதான்..

ᴠᴇᴛᴛᴀɪᴀɴ~

‏ஒண்ணுமே இல்லாம இந்தப் படத்துக்கு தெரு தெருவா வண்டி அனுப்பி ப்ரமோஷன் வேற #Seemaraja

Apple Walker

படமாடா எடுத்து வச்சிருக்கீங்க :(( வேஸ்ட் ஆப் டைம்...

Nisha 

‏I expected a lot from #சீமராஜா

but I felt like #போதும்டாராஜா

ஜால்ரா காக்கா

‏பொன்ராம் = ராஜேஷ்

சிவா மனசுல சக்தி = வருத்தப்படாத வாலிபர் சங்கம்

பாஸ் என்கிற பாஸ்கரன் =ரஜினி முருகன்

ஆல் இன் ஆல் அழகுராஜா =சீமராஜா

தயாரிப்பாளர்களுக்காக ஒரே பேட்டன்ல படம் எடுத்தா குறிப்பிட்ட லெவலுக்கு மேல சலிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு #சீமராஜா

கரடிமுத்து

‏படம் படுசுமார்!

கொஞ்சம் கூட ரிலவெண்டான காட்சிகளே இல்ல! சம்பந்தமே இல்லாம எங்கிட்டோ போகுது.

சிம்ரன் என்ன ட்ரை பண்ணுதுனே புரியல.

ஏன் நெப்போலியன் மேல அதுக்கு கோவம்னு தெரில.

க்ளைமேக்ஸ்ல ஏன் சமந்தாவ தூக்குல ஏத்துறானுகன்னு தெரில.

சமந்தா ஏன் நம்பிக்கை இல்லனு சொல்லுதுனு புரியல.

 

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x