Last Updated : 03 Mar, 2018 10:38 AM

 

Published : 03 Mar 2018 10:38 AM
Last Updated : 03 Mar 2018 10:38 AM

நாடக உலா: ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்

தமிழ் நாடக மேடையில் இது ‘பயோபிக்' சீஸன். சரித்திர, புராண, ஆன்மிக வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைக் கதை மேடையேறி வருகின்றன. லேட்டஸ்ட்டாக சதாசிவ பிரம்மேந்திரர். விரைவில் ரமண மகரிஷியும் மேடைக்கு வரப் போகிறார்.

இது தொடர்பாக 2 குழுக் கள் ரமண ஆராய்ச்சியில் மூழ்கியிருப்பதாக தகவல். 17-ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் அவதரித்தவர் பிரம்மேந்திரர். கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திரு விசநல்லூருக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது.

17-வது வயதில் திருமணமானது.காஞ்சியில் உபநிஷத் பிரம்மேந்திரரிடம் தீட்சையும், சந்நியாசமும் பெற்றவர். பிரம்மஞானம் அடையப் பெற்றார். மவுன விரதம் மேற்கொண்டு, நிர்வாணம் மற்றும் அரை நிர் வாண நிலையில் அலைந்து திரிந்து, அருள்பாலித்து கரூருக்கு அருகில் உள்ள நெரூரில் ஜீவசமாதி. கீர்த்தனைகள் சில இயற்றி இருக்கிறார் பிரம்மேந்திரர். சாமா ராகத்தில் அமைந்த பிரபல மான ‘மானச சஞ்சரரே...’ பாடல் இவருடையதுதான்.

நாடகத்தின் தொடக்கத்தில் சிருங்கேரியின் அப்போதைய மகா சந்நிதானம் தனது யாத்திரையின்போது, பிரம்மேந்திரர் சமாதி அடைந்த நெடூருக்கு வந்து 3 நாட்கள் தங்கித் தவமிருந்து, மறைந்த மகா னின் தரிசனம் கிடைக்கப் பெறுகிறார். அதில் இருந்து ப்ளாஷ்பேக் உத்தியில் நாட கம் பயணித்து பிரம்மேந்திர ரின் புனித வாழ்க்கையை விவரிக்கிறது.

பதின் பருவத்திலேயே வேதாந்த விசாரங்களில் விவரம் தெரிந்தவராக அறிமுகமாகிறார், பூர்வாசிரமத்தில் சிவராமகிருஷ்ணன் நிரஞ்சன் என்ற பெயர் கொண்டிருந்த பிரம்மேந்திரர், ஆகாஷ் புராண ராமலிங்க சாஸ்திரி கள் என்பவரிடம் பாடம் பயின்று, ஆசானை பிரமிக்க வைக்கிறார். நடிப்பால் அரங் கில் பார்வையாளர்களை யும்!

வீட்டில் மருமகளின் வருகையையொட்டி தடபுடலாக விருந்து தயார் செய்து கொண்டிருக்கிறார், சிவராமகிருஷ்ணனின் தாயார். பசி யில் இருக்கும் மகனிடம், ‘‘உள்ளே வராதே... அவா எல்லாம் வந்த பிற்பாடுதான் சாப்பாடு. அதுவரை வெளித் திண்ணையில் இரு...’’ என்று கண்டிப்புடன் சொல்வதும், சிவராமகிருஷ்ணனின் அகக் கண் திறந்து, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிவிடுவதுமான காட்சி நெகிழச் செய்கிறது. ‘‘அம்மாவை போல் மருமக.. அப்பனைப் போல் பிள்ளை’’ என்று பூக்காரம்மா வின் தங்கை பேசும் முன்னால் வசனம், அர்த்தமும் ஆழமும் நிறைந்தது!

சிவராம கிருஷ்ணனின் தேடல் தொடர்ந்து கொண்டு இருந்த நிலையில், காஞ்சி யில் உபநிஷத் ஆசிரமத்துக்கு வருகிறார். இங்கே இவரின் ஆற்றலை நேரடி யாக அறிந்துகொள்ளும் உபநிஷத் பிரம்மம், இவருக்கு சதாசிவம் என்று நாமகரணமிட்டு, தீட்சையளித்து, சந்நியாசமும் வழங்குகிறார்.

சிவராமகிருஷ்ணன், சதா சிவ பிரம்மேந்திரராக உருமாறும் இந்த ஒரு சில நிமிடங்கள் நாடக ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் அழுத்தமான கணங்கள்!

அதேபோல், சதாசிவ பிரம் மேந்திரரை பேச்சைக் குறைத்துக்கொண்டு, பிறர் பேசுவதை அதிகமாகக் கேட்கும் படி உபநிஷத் பிரம்மம் பணிக்க, ஒருபடி மேலே போகும் சதாசிவ பிரம்மேந்திரர் பேசுவதை சுத்தமாக நிறுத்திவிட்டு மவுனமாகி விடுவதையும், ஆசிரம வாழ்க்கையையும் துறக்கும் விதமாக தண்டத்தையும் குருவின் இருக்கையில் சாய்த்துவிட்டு, நிர்வாண நிலையில் தன் பயணத்தைத் தொடர்வதையும் அடர்த்தியானக் காட்சிகளாக்கியிருக்கிறார், கதை -வசனம் எழுதி இயக்கியிருக்கும் விவேக் சங்கர்.

உபநிஷத் பிரம்மம் வேடம் ஏற்கும் டி.டி.சுந்தரராஜன், நிஜத் துறவியாகவே மாறிவிடுகிறார். நேர்த்தியான உடல்மொழி, தெளிவான வசன உச்சரிப்பு என்று வந்து செல்லும் ஒருசில காட்சிகளில் பார்வையாளர்கள் மனதில் பதிந்துவிடுகிறார். வைராக்கியம் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் அருமையானப் பதிவு.

இந்த ஆசிரமத்தில் உபநிஷத் பிரம்மத்துக்கு உதவி யாக வலம் வரும் வேதரத்னா எம்.பி.மூர்த்தி, மற்றபடி சீரியஸாக நகரும் நாடகத்தில் லேசாக புன்முறுவல் பூக்கவைக்கும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

ராமலிங்க சாஸ்திரியாக ஹேமந்த், சிவராமகிருஷ்ண னின் குரு, இவருக்கு வேடப் பொருத்தம் ஓஹோ. முக்கியமாக, இவரின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று நினைக்க வைக்கும் ஒரு வித்தியாசமான தொனி.

கலை மோகன்பாபு, அக்ர ஹார வீடுகளைத் தத்ரூபமாக அமைத்திருக்கிறார். நிர்வா ணம் தெரியாமல் பிரம்மேந்திரரைக் காண்பிக்க உழைத்திருக்கிறார்கள், அத்தனை பேரும்.

கீர்த்தனை பன்னீர்

வரலாற்றை சொல்ல வேண்டும் என்கிற தீவிரத்தில் செயல்பட்டிருக்கும் டைரக்டர், அந்த மகான் இயற்றியிருக்கும் கீர்த்தனைகளை அங்கங்கே பன்னீர் மாதிரி தெளித்து விட்டிருப்பதோடு சரி. இதை இசை நாடகமாக்க அவர் முனையவில்லை என் பது தெரிகிறது.

தான் ராமேஸ்வரம் போக வேண்டும் என்று சொல்வ தோடு உபநிஷத் பிரம்மம் பாத்திரத்துக்கு ‘குட்பை’ சொல்லிவிடுகிறது நாடகம். எனில், இறுதிக் காட்சியில் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடையும் காட்சியில் ஒரு பக்கத்தில் உபநிஷத் உட்கார்ந்திருப்பது ஏன்? எதற்கு? எப்படி என்று புரியவில்லை. அது சிலையா என்பதும் விளங்கவில்லை!

பொதுவாக துறவிகள் என் றால் நடை, உடை, பாவனை அனைத்திலும் சாந்தமாகவும், பணிவாகவும் இருப்பார்கள் என்ற ஒரு பிம்பம் உண்டு. இங்கே சதாசிவ பிரமேந்திரர் (கிரீஷ் ஐயப்பன்) துடுக்காகவும், மிடுக்காகவும் இருக்கிறார். காட்டுப் பகுதிகளில் இவர் நடந்து செல்லும் போதெல்லாம், சுதந்திர தின அணிவகுப்பில் நடக்கும் ராணுவ மார்ச் பாஸ்ட்தான் நினைவுக்கு வரு கிறது!

நல்ல நாடகம்.

ஆனால், மிக நல்ல நாடகம் என்று சொல்ல யோசிக்க வேண்டியிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x