Published : 18 Jan 2019 05:15 PM
Last Updated : 18 Jan 2019 05:15 PM

நெட்டிசன் நோட்ஸ்: பேட்ட vs விஸ்வாசம் - அவதாருக்கு எச்சரிக்கை

பொங்கலுக்கு ரஜினியின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய  படங்கள் வெளியாகின. இந்த நிலையில் இரு தயாரிப்பு நிறுவனங்களும் தங்களுடைய படம்தான்  அதிகம் வசூல் என்று போட்டி போட்டு தகவலை வெளியிட்டு வருகிறார்கள். தொடர்ந்து இரு நிறுவனங்களும் போட்டி போட்டு வசூலைக் கூறியதால் சமூக வலைதளங்களில் பலரும் இதனை விமர்சித்தனர்.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Happy'ness for Pongal

தனக்கு விளம்பரம் பிடிக்காது, பண்றதில்லைன்னு சொல்லிக்கிட்டு விளம்பரம் பண்றதுக்கு காசு கொடுப்பாரு போல... புது வகையான விளம்பர யுக்தி.

உளவாளி

மசால் வடையாடா..ரொம்ப நல்லாருக்குடா

திரு

அவன் எவ்ளோ சொன்னான்?

100

அப்ப 125 போட்டுக்கோ...

ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா

சார் டோட்டல் மிஸ்டேக்..

என்னடா 100க்கு 129 வருது..

சார் அது வந்து..

வெற்றி!!!

125 கோடி தமிழ்நாடு அலோன்...

பழநிச்சாமி ஓடியாந்துரு....

~

‏125 cr ஆச்சு.. வேணா நீங்க ஒருக்கா எண்ணிப் பாத்துக்கிடுங்க...

தேனிக்காரன்

அவதார் ... ஜாக்கிரதையாக இருங்கள் நாங்கள் வந்து கொண்டு இருக்கிறோம்.

RaM

தமிழ்நாட்லே 125 கோடினா உலகம் முழுக்க 1250கோடி தாண்டிருக்கும்

V I P E R™

~அப்பாடா... நான் கூட 130 கோடினு நினைச்சி பயந்துட்டேங்க!!

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x