Published : 20 Dec 2018 03:53 PM
Last Updated : 20 Dec 2018 03:53 PM

நெட்டிசன் நோட்ஸ்: சீதக்காதி - ஆத்மாவின் படம்

இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அர்ச்சனா, காயத்ரி ஆகியோர் நடிப்பில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சீதக்காதி திரைப்படம் தற்போது திரைக்கும் வந்துள்ளது.

இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

wicky

‏ பழம் தின்று எச்சம் பரப்பும் கலைஞன் என்ற பறவை இருக்கும் வரை கலை என்ற வனம் இவ்வுலகில் அழியாது...

 

ஆதன்

சீதக்காதி

அய்யா எங்க படத்துல நடிக்க வரனும்னு நிறைய பேர் வீட்ல வந்து கேக்கும்போது வெறும் போட்டோ காமிக்கிறப்போ கைதட்டல்.

கதையின் போக்கில் ரசிகன் பொருந்திக்கொள்ளும் ஆச்சர்யம்.

இயக்குனரின் உழைப்பிற்கும் இசையின் உழைப்பிற்கும் மொத்த பேருக்கும் சிறப்பான வாழ்த்துகள்!

 

vaitheeswaran NS

"அவன்"  (Sung by Harish Sivaramakrishnan of Agam Band) என்ற பாடல் இன்றும் என்னுள் ஒலித்துக்கொண்டுஇருக்கிறது

சீதக்காதி மன நிம்மதி

கலை சாவை மதிப்பதில்லை ...

 

SKP KARUNA

‏ ஆமாம்! கலைஞனுக்கு என்றும் அழிவில்லை. ஆவியாகவேனும் கலையை காப்பாற்றிக் கொண்டிருப்பான். (சீதக்காதி கதை)

 

Ashwin Balasubramaniam

‏ கொடுத்துச்சிவந்த கரங்கள் என  மரணித்தும் புலவர்களுக்கு உதவிய #அய்யா சீதக்காதி போல, நடிப்பதுமட்டுமன்றி நற்பெயரையும் சேர்த்து விதைத்த விஜய் சேதுபதி..

 

தீராத விளையாட்டு பிள்ளை

 

கலைத்தாய் கண்டெடுத்த

கருப்பு வைரத்தின் #சீதக்காதி

வெற்றி பெற வாழ்த்துகிறோம்..

 

Angry Young Man..

 

சீதக்காதி தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த மொக்கை. மிடில.

சூதுகவ்வும் எடுக்கும் போது ஐயா வந்துருப்பார் போல... #Seethakaathi

 

தமிழ் எருது

 

இப்படி ஒரு படம் பார்த்து

எவ்வளவு

நாள்

ஆச்சு

சீதக்காதி

ஆத்மார்த்தமான

ஆத்மாவின்

படம்

Maathevan

நம்ம  விஜய்  சேதுபதி நடிப்பு பற்றி நிறைய பேசியிருக்கோம்.. சீதக்காதி பொறுத்தவரைக்கும் அந்த மனுசனோட நம்பிக்கை, தைரியம்.. இது ரெண்டுத்ததான் அதிகம் பேசணும்னு நான் நினைக்குறேன்

 

krishnaprasanth

சிரிப்புகள் அல்லாமல் சிலிர்ப்பையும் வித வித சிந்தனையால் மக்களை ஆளும் மன்னன் மக்கள் செல்வன் அருமை அண்ணன் விஜய் சேதுபதியின் சீதக்காதி வரலாறு சொல்லும் வெற்றிகள் வகுத்திட வாழ்த்துக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x