Published : 10 Dec 2018 12:38 PM
Last Updated : 10 Dec 2018 12:38 PM
அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி புதிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
கில்லி 2.0
தோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி அந்நிய மண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்ததும் வரலாறு
கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி அந்நிய மண்ணில் வென்று கொண்டிருப்பதும் வரலாறு
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச?
Aus be like:
நீ அடிச்சது ஒரு புள்ளைப்பூச்சியை.. அதனால, உனக்கு ஒரு வெங்கல கிண்ணம் கூட
கிடையாது
தங்கதளபதி
தலைவன் ஸ்டீவன் ஸ்மித் இருந்தா மட்டுமே ஆஸ்திரேலியா ஒரு டீமாகவே இருக்கும்.
End Game
உன் ஆளு உன் இடம் எங்களுக்கு பயம் இல்ல அதுக்கு இதான் சாம்பிள்..
சூர்யா
அடிலெய்டில் அசராமல் அசத்திய அஷ்வின்
அறிக்கி
ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றை உருவாக்கிய #TeamIndia வாழ்த்துக்கள். தொடர்ந்து வெற்றிகள் குவிக்க வேண்டும்.
SK
அந்த Poor Captaincy அஹ் மறந்துட்டானுங்க .. அதான் கோலி
தூங்காநகரம்
ரெண்டு இன்னிங்க்ஸ்லயும் கோலி நல்ல வௌாடாத டெஸ்ட் மேட்ச்ல இந்தியா ஜெயிப்பு.
பங்காளி
கங்காரும் ஓநாயும் இருக்கற நாட்ல ஒண்டிப்பொழைக்கற உனக்கே இவ்வளவு கொழுப்புன்னா சிங்கமும் புலியும் சிறுத்தையும் இருக்கற பெருமையான நாட்ல வாழுற எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் ..
Deva
கேப்டன்ஸி எப்டி இருக்குதுன்னு இன்னைக்கு மேட்ச் வீடியோஸ் கோலிக்கே போட்டு காட்டனும்.!
வொர்ஸ்ட் பீல்டிங் செட் டா கண்ணா
டீ
விராட் கோலி டு ஆஸ்திரேலியா, "என்னடா கந்துவட்டி கோவிந்தா உன்னைய என்னவோ பெரிய ரவுடின்னாய்ங்க...."
Tom
அவன் இருந்திருந்தா இவன் இருந்திருந்தானு அந்தகால சச்சின் ஃபேன்ஸ் மாதிரி அனத்தாம வெற்றிய பாராட்ட பழகிக்கங்கடா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT