Published : 24 Oct 2018 03:54 PM
Last Updated : 24 Oct 2018 03:54 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஊரெல்லாம் டெங்கு காய்ச்சல்

டெங்கு, பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் தாக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்....

Sri

‏டெங்குவிற்கென்று பிரத்தியேக மருந்து என்று இல்லை. காய்ச்சல் குறைய மருந்து,நீராகாரம், இளநீர் என்று hydration , ரெஸ்ட் எடுப்பது, கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பது முக்கியம். 

prabhu

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

அதிராம்பட்டினம் பகுதி மக்களுக்கு தற்போது காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு வேகமாகப் பரவி வருகிறது

Sonia Arunkumar

‏பன்றிக் காய்ச்சல், டெங்கு, மலேரியான்னு ஆரம்பிச்சிருச்சு. மழை இன்னும் பெய்தா நிலைமை மோசமாக வாய்ப்பிருக்கு.

தோழர் செல்வராசு உலகநாதன்

‏கடந்த காலங்களில் மர்மக் காய்ச்சல் மட்டுமே வந்த தமிழகத்தில் ஏனோ தெரியலை. டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்சசல் எல்லாம் வருது

Mohana Sundaram

‏டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை.

Raju Desingu

‏தமிழகத்தில்  டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருக்கிறது. மர்மக் காய்ச்சல் என்று அரசாங்கம் மூடி மறைக்கிறது. மக்களும் நம் வீட்டில் நோய் வந்து  மரணம் நிகழவில்லை , நமக்கென்ன என்று வாழ்கிறார்கள் .....

Marudhu

‏டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச்சத்தைக் குறைத்துவிடும். உடலின் நீர் இழப்பைத் தடுக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் போன்ற நீராகாரமாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். #Dengue

Pal Murukan A

ஊரெல்லாம் டெங்கு காய்ச்சல்..

செய்தித் தொலைக்காட்சிகளுக்கு மட்டும் ரஜினி காய்ச்சல்..!

Lawyer Lawyer Senthilkumar

நிலவேம்பு பொடி, பப்பாளி இலை சாறு, கொய்யா இலை சாறு (தளிர் இலை), ஏலக்காய், கிராம்பு சேர்ந்து அரைத்த பொடி இவற்றை எல்லாம் தயார்நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். காய்ச்சல் வந்ததும் தாமதப்படுத்தாமல் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவும். அருகிலுள்ள மருத்துவமனையில் ஆலோசனைகளைப் பெறவும்.

Jothimurugan.LA

‏தமிழத்தில் அரசு மருத்துவமனைகள் சரியாக இயங்குகிறதா.??? இல்லையா.???

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x