Published : 06 Nov 2018 15:53 pm

Updated : 06 Nov 2018 15:53 pm

 

Published : 06 Nov 2018 03:53 PM
Last Updated : 06 Nov 2018 03:53 PM

நெட்டிசன்ஸ் நோட்ஸ்: ‘சர்கார்’ - ரசிகனா எனக்குச் சந்தோஷம், திருப்தி: மக்களா இந்தப் படம் அத்தியாவசியம்

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்று (நவம்பர் 6) உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தைப் பற்றிய நெட்டிசன்களின் கருத்துகள் இங்கே...

 


Sarkar Hunter

ஒரு ரசிகனா இந்தப் படம் எனக்கு சந்தோஷம், திருப்தி. ஆனா, மக்களா இந்தப் படம் ஒரு அத்தியாவசியம். என் தலைவன் சுயநலமில்லாமல் ஒரு உன்னதமான விஷயத்தைச் சொல்லி இருக்காரு. நாங்க திருத்திக் கொள்கிறோம் தளபதியே! நம்மளோட ஒரு ஓட்டு உரிமையின் அவசியத்தை உணர்ந்தோம். #Sarkar ஒரு பாடம்.

JOSEPH AAD

உப்பு போட்டு சாப்பிடுறியா ?

தளபதி: மீனவன்டா நான், உப்பு காத்தில் வாழ்கிறவன்.

அரங்கம் அதிர்கிறது.

உன்னை போல் ஒருவன்

படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல, எதிர்பார்த்ததவிட தாறு மாறா இருக்கு.

புரட்சியாளர் AK

வெறித்தனம். ஸ்டண்ட்ஸ் தான் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ். கேமரா, BGM, Editing, பாட்டுனு ஸ்டண்ட் சீக்வன்ஸ்ல சம்பந்தப்பட்ட எல்லா ஏரியாவும் வெயிட்டு. எழவு, லவ் ட்ராக் தான் சொதப்பறாப்ல. முருகு மாம்ஸ் எகைன். மத்தபடி இதுலயும் அழுக வெச்சுட்டாப்டி. எமோஷன் நல்லா எழுத வருது.

காதர்

#49P நமது ஓட்டை வேறொருவர் கள்ள ஓட்டு போட்டுவிட்டால், அந்த ஓட்டை இச்சட்டத்தைக் கொண்டு மீண்டும் நாமே போட முடியும் என்று இவ்ளோ நாளாக பலருக்குத் தெரியாமல் இருந்ததை முழு விளக்கத்தோடு சொல்லியிருக்கும் @ARMurugadoss சார் @actorvijay அண்ணாவுக்கு கோடி நன்றிகள்.

Sundar Kamal

#சர்கார் - 'துப்பாக்கி', 'கத்தி' இல்லாமல், தன் ஜனநாயகக் கடமையான ஓட்டை வைத்து, மக்களின் ‘நண்பனாக’ இருந்து, ‘மெர்சலாக’ அனைவரையும் ‘தெறி’க்கவிட்டு ‘மக்களாட்சி’ அமைத்துவிட்டார் விஜய்.

MUNIASAMY SAKTHIVEL

விஜய்யின் வேற லெவல் வெறித்தனம்.

வீர மீனவன்

இளைய சமுதாயத்தை அரசியல் பேச வச்சிருக்கு சர்கார்.

Siranjeevi T

ஒவ்வொரு அரசுத்துறையும் ஊனமா இருக்குனு சொல்லாம சொன்ன காட்சி, அந்த Hospital Scene  

ராவ் ஆனா ரெளடி (O-ve)

பைட் சீன்லா ஓவர் டோஸ் ஆய்டுமோனு நெனச்சேன். ஆனா, படத்தோட பெரிய பிளஸ் அதான்.

அட போடா

ட்விட்டர், முகநூல், செய்தித்தாள், சின்னத்திரைகளின் வழியே நாம் அறிந்த செய்திகளைத் தொகுத்து, பெரிய திரையில் பிரம்மாண்டமாய்...

சதீஸ் ராகவ்

49ஓ மாதிரி இனிமேல் 49P என்னும் தேர்தல் சட்ட விதிமுறையையும் மக்கள் தேடி பயன்படுத்துவாங்க. சூப்பர் மெஸேஜ். அன்ட் தேங்க்ஸ் டூ சர்க்கார்!

SNantham

#சர்கார் மெர்சல் தெறி. அருமையான அரசியல் புரட்சி படம். குட் என்டெர்டெய்னர்.

I m rishap

தற்கால அரசியல், அதன் அழுக்கு, மக்கள் மீது நிகழ்த்தப்படும் அவலங்கள் எல்லாவற்றிற்குமான பொறுப்பையும் விமர்சனத்தையும் முழுமையாக மக்கள் மீதும், அவர்களின், ஜனநாயகத்தின் பேரில் உள்ள அலட்சியத்தின்பேரிலும் வைக்கிறது ’சர்கார்’.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x