Published : 03 Jun 2018 05:41 PM
Last Updated : 03 Jun 2018 05:41 PM

நெட்டிசன் நோட்ஸ்: கருணாநிதி 95- நம் காலத்து திருமூலர்

திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதுகுறித்து நெட்டிசன்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்கள் வாழ்த்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அதுகுறித்த பதிவுகள் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

நேசமிகு ராஜகுமாரன்

மலைக்கவும் வியக்கவும் வைக்கும் கருணாநிதியின் ஆற்றல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் எள்ளல் சுவை! ஒரு முறை ஒரு வடநாட்டு காவி சாமியார் அவரின் தலையை சீவி விடுவேன் என்று சொன்னபோது கருணாநிதி சொன்ன பதில்: "நான் பல முறை முயன்றும் சீவும் அளவுக்கு என் தலையில் முடி இல்லை! அந்தச் சாமியார் இப்போது சீவி விடுவதாகச் சொல்கிறார்! வரட்டும் பார்க்கலாம், எப்படி சீவுகிறார் என்று!"

#தமிழ்போல்வாழ்க!

Shalini

இத்தனை காலம் வாழ்ந்து இத்தனை சமூக தொண்டாற்றிய மாமனிதனை வெறும் “கலைஞர்” என்று அழைப்பது போதாது. ஒரு பாரத் ரத்னா, ஒரு சமூக நீதி திலகம், புரட்சி பெருந்தலைவர்..... வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து நம் அன்புத்தலைவர் கருணாநிதிக்கு ஒரு புதிய பட்டம் கொடுப்போம்! Happy Birthday தலைவா!

Shunpakee Anand

வண்ணமலர் பேரழகை சொல்லில் வைத்தவர்....

வரிப்புலியின் உறுமலுக்கு ஓசை சேர்த்தவர்...

அஞ்சுகப் புதல்வனே...!

அஞ்சு முறை முதல்வனே...!

வைரவிழா நாயகனே....!

இந் நன்னாளில் உம்மை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்.

Bernad Sha

அரசியல்... இலக்கிய.. அரியாசனத்தில் அமர்த்தி தமிழ் தாய் அகமகிழ்ந்த அவதார நாயகர்...!

ஆழி சூழ் அகலம் அழியாது நிலைத் திருக்கும் வரை பூமித்தாய் போற்றி பாதுகாக்கும் பொக்கிஷத் தலைவர்...!

வாழிய...மங்காத புகழ் சுமந்து வாழிய...வாழியவே....!

Nanjil Sampath

அகவை 95-ல் அடியெடுத்து வைக்கும் 1000பிறை கண்ட கருணாநிதிக்கு பாயிரம் பாடுகிறேன்! பல்லாண்டு இசைக்கிறேன்!

பேசும் வல்லமையை இழந்தாலும் பேசப்படுகிற இடத்தில இருக்கின்ற நீங்கள் பேசுகின்ற நாளுக்கு காத்திருப்பவர்களில் நானும் ஒருவன் !

sivasankar SS

ஏரோட்டும் விவசாயிகள் சாகக் கிடக்க, தேரோட்டம் உனக்கு தேவையா தியாகேசா என்று கேட்டவரும் அவரே, ஓடாமல் இருந்த அதே திருவாரூர் தியாகேசன் தேரை முதல்வர் ஆனபின் ஓட்டிக் கொடுத்தவரும் அவரே...

Anbil Mahesh

இந்திய அரசியலை தன்னிகரில்லா ஆளுமையால் தன்னிடத்தே வைத்திருந்த திராவிடச் சூரியனே! உம்மை வணங்கி மகிழ்கிறோம்!

நித்யா

"கோவை சிங்காநல்லூரில் பத்து ரூபாய்க்கு ஒரு வீடு பிடித்துக் கொண்டு நானும் என் மனைவி பத்மாவதியும் வாழ்ந்தோம். அந்தக் குருவிக்கூட்டுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு, நான் எழுதிக் குவித்தவை ஏராளம். அந்த வாழ்க்கை அவ்வளவு இன்பமாக இருந்தது" #கருணாநிதி

கருணாநிதி வாழ்ந்த அந்த வீடு

கரன் கரடி

பெரியாருக்கு அடுத்து ஆரிய கூட்டம் அலறித்துடித்து அஞ்சி நடுங்கும் பெயர் "கருணாநிதி"

நீடூழி வாழ்க திராவிடச் சூரியனே!!

S.Thanigaikumaran‏

95 முறை சூரியனை சுற்றிவந்த சூரியனே..

தாடியில்லா வள்ளுவனே...

தடியில்லா பெரியாரே...

பொடியில்லா அண்ணாவே..

மூவரும் ஓர் உருவாய் ....

மூவேந்தரின் மறுபிறப்பாய்......

அறிவாலயத்தின் ஆண்டவரே...

என் உயிரினும் மேலான பாசத்தலைவரை

வாழ்த்தி வணங்குகிறோம்.

Saravanan Chandran

கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், உடலைப் பேணும் அம்சத்தை இந்தத் தலைமுறை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன்பு தினமும் உதிக்கும் சூரியன். அவர் நன்றாக இருந்த காலகட்டத்தில் இந்த விஷயத்தில் கடிகாரமும் அவரிடம் தோற்றுப் போயிருக்கிறது. உடலே மந்திரம் என வாழ்ந்து காட்டிய நம் காலத்திய திருமூலருக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

இசை S D

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அடிப்படை‌ கருணாநிதி அளித்த 69% சமூக நீதி!

அம்பேத்கரின் 18% கனவை உள்ளபடியே நிறைவேற்றிய ஒரே தலைவர் கருணநிதி!

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கருணாநிதி வழங்கிய 20% ஒதுக்கீடு தமிழகத்தின் வளர்ச்சி வரலாற்றை முழுவதுமாக மாற்றி அமைத்தது.

Jothimani

இந்திய அரசியலின் பிதாமகர்,60 ஆண்டுகாலம் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்,5 முறை முதலமைச்சர், படைப்பாளி, படிப்பாளி, இவருக்கு எங்கே கிடைக்கிறது நேரம் என்று வியக்கவைக்கும் ஓயாத உழைப்புக்கு சொந்தக்காரர் திமுகவின் தலைவர் கருணாநிதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

Syed Khaleel

இயல் இசை நாடகம் என முத்தமிழ் மாத்திரம் அல்ல.நான்கு தமிழ் உண்டு

மூளை நரம்பை மூச்சுக்குழாயை திருகி தீ பரப்பும் காந்தத் தமிழே நான்காம் தமிழ்

அதுதான் கருணாநிதி தமிழ், ஆம் கலைஞருக்கென்று ஒரு தனித்துவ தமிழ் உண்டு

அரவாணி என்றழைத்து அகக் காயம் செய்வதுதான் அனைவரது தமிழ்

T R B Raja

ஆண்டவா

தமிழகத்தை ஆண்ட ஆண்டவா

நீ இல்லாமல் இங்கு ஏதும் இல்லை

உன்னால் விடிந்த வாழ்க்கைகளுக்கு கணக்கே இல்லை உன் ஆளுமை, உன் உழைப்பு,உன் துணிச்சல் உன் கொள்கைப்பிடிப்பு...நீ இந்த மண் மீதும் மக்கள் மீதும் வைத்திருக்கும் பாசம் இவையே இன்றைய வலுவான தமிழகத்தின் அடித்தளம்

Sindhan (சிந்தன்)

தந்தை பெரியார் தொடங்கி, நானும் என்னிலும் இளம் தோழர்களும் வரை ஆதரித்தும், விமர்சித்தும், எதிர்த்தும் களமாடிய மூத்த அரசியல் தலைவர், தமிழக அரசியலின் பிரிக்க இயலாத பகுதியானவருமான மு.கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

திரு

தமிழக அரசியலில் அதிகம் வெறுக்கப்பட்டவரும் விரும்பப்பட்டவருமான கருணாநிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

கோவை-சிவா

அவரே கருணாநிதி

80 ஆண்டு பொதுவாழ்வு

75 ஆண்டு பத்திரிக்கைப் பணி

61 ஆண்டு மக்கள் பிரதிநிதி

50 ஆண்டு கட்சி தலைமை

18 ஆண்டு தமிழக முதல்வர் பொறுப்பு

8 பிரதமர்கள்

7 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய ஆளுமை

அவரே கருணாநிதி

Aravindhan

இந்திய எல்லை ஆரியத்தால் தான் முடிய வேண்டும் என்று எண்ணி விவேகானந்தர் மண்டம் கட்டப்பட்டது. அதற்கு சவுக்கு அடி கொடுத்தாற்போல் 1330 அடி உயரம் கொண்ட வள்ளுவன் சிலையை நாட்டி தமிழையும் திராவிடத்தையும் வளர்த்தவர் கருணாநிதி

#HBDKalaignar95

திரு.தீன்

#HBDKalaignar95 நான்கைந்து மனிதர்கள் செய்யும் சாதனைகளை ஒரே பிறவியில் செய்து விட்டவர் கருணாநிதி.... நம்மை போல அவருக்கும் 24 மணி நேரம் தான்.....

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x