Published : 14 Jun 2018 04:11 PM
Last Updated : 14 Jun 2018 04:11 PM

நெட்டிசன் நோட்ஸ்: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - "ஈயம் பூசிய மாதிரியும் இருக்கனும் ஆனா பூசக் கூடாது"

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

 

மு.அன்பழகன்  

‏அடேங்கப்பா..‌அப்ப துணை வட்டாட்சியர விட சபாநாயகர்தான் பெரியவர் போல.

3ஆவது நீதிபதி நியமிக்க 6 மாசம் ஆகும். அவரு விசாரிக்க 6 மாசம் ஆகும். அவரு இந்திரா பானர்ஜி சொன்னது சரினு சொல்லுவாரு அதுக்கு ஒரு 6 மாசம். ஆக மொத்தம் 1.5 வருசம் சீயர்ஸ்.

குட்டி முகி

‏எந்த வகையில் எல்லாம்  அரசை காப்பற்ற முடியுமோ காப்பாற்றுகிறது நீதிதுறையும் பாஐக அரசும்

 

 

Pranavan

‏ரஜினி கார்த்திக் சுப்பு ராஜ் படத்திலையும் கமல் பிக்பாஸுக்கும் தயாரா இருக்கும் போது தேர்தல் வரும் என்று நினைக்கிறீங்க பாரு உங்கள

Naveenmurugasamy

‏அப்படி ஒரு திருப்பு இப்படி ஒரு திருப்பு ஈயம் பூசன மாதிரியும் இருக்கனும் ஆனா பூச கூடாது

Manivannan.s

‏#18MLAs கிரிக்கெட் ஸகோரை பார்க்கிறது போல இழுக்கிறாங்களே!

 

 

திரு

‏இந்த அற்புதமான தீர்ப்ப மூணு மாசம் முன்னாடியே குடுக்க என்னவாம்? தட் இத தான் நைட்டு பூரா ஓட்டிக்கிட்டு இருந்தியா மொமண்ட்...

No, I'm not   

‏மூனாவது நீதிபதிய யாரு நியமிக்கனும்?

தலைமை நீதிபதி மேடம் தான்.

அந்த மேடம் என்ன தீர்ப்பு சொல்லிருக்காங்க.

இதையேதான் தீபக் மிஸ்ரா ஐயாவும் சுப்ரீம்கோர்ட்டுல செய்றாரு

நாட்ல...

 

 

வாழவந்தார்    

‏இதைதான் ஒரு மகான் அன்றே சொன்னார் இது நீதிமன்றமா அல்லது திமன்றமா என்றார் ஒரு மகான்

பல்லிவால்

இப்ப துரைமுருகனிடம் போய், "சார் நீதிமன்றம்" னு யாராவது சொல்லுங்களேன் :-))))

 

Muthu Mohamed

‏கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே

இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது எப்போது

இது ஆண்டவன்(Fill ur Choice) ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது

ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ

ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x