Published : 28 Jun 2018 12:45 PM
Last Updated : 28 Jun 2018 12:45 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஜெர்மனி வெளியேற்றம் - ஜெர்மனி = மும்பை பல்தான்ஸ்

ரஷ்யாவில் நடந்து உலக கோப்பை கால்பந்து போட்டியில் அடுத்து சுற்றுக்கு நுழைய,  வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலிருந்த ஜெர்மனி, தென் கொரியாவிடம் கடைசி நிமிட கோல்களில் 2-0 என்று தோல்வியை தழுவியது.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

 

இட்லி

‏ஜெர்மனி = மும்பை பல்தான்ஸ்

சாமானியன்  

‏என்னதான் இருந்தாலும் ஜெர்மனி இந்த அளவுக்கு மோசமா விளையாடியிருக்க கூடாது.

Newton     

‏ஜெர்மனி அணி 2014: இதுவும் கடந்து போகும்

ஜெர்மனி அணி 2018: இதுவும் கடந்து போகும்

Brazilian Bijili         

‏ஜெர்மனி ஹைலைட்ஸ் மறுபடியும் பாத்தேன். கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு ஜோச்சிம்லோ வ பாக்கும் போது. ரியல் டேலண்ட் ஹி இஸ்.    

PerúSU

‏ரஷ்யாவில் ஜெர்மனி தோற்பது முதல்முறையாக அல்ல.

 Thalapathy     

‏ஜெர்மனி பைனல்கு போகும்

நம்ம பெர்லின் சுவறுக்கு போய் மேட்ச் பாக்கலாம்...கப் அடிக்கும் போது செமய கொண்டாடலாம்னு நெனச்சன் .....இப்படி சல்லி சல்லியா நொறுக்கிடீங்கலே டா

மிஸ்டர்காளை~  

ஏன்டா ஜெர்மனி உன்ன பெரிய

ரவுடின்னு நினைச்சேன் இப்படி

பொசுக்குன்னு கொரியா கிட்ட போய்

மண்டி போட்டுட்ட....

H.Umar Farook

‏ஜெர்மனி தோற்றதை பார்க்கும் போது ஹிட்லரை தோற்கடித்த சந்தோஷம் !

புகழ்

‏கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்காத நாடு ஜெர்மனி..

போற இடம் ரஷ்யா என்பதையுணர்ந்தாவது..ஜெர்மனி இன்னும் சிறந்த தயாரிப்போடு வந்திருக்கலாம்..அவ்வ்

Madhavan.G    

‏2018 டிபண்டிங் சாம்பியனுக்கு சங்கு ஊதுற வருசம் போல ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் ஃபுட்பால் ல ஜெர்மனி அடுத்த சுத்துக்கே போக முடியாம போனது #வலி

Pirai Kannan

‏2010 ல் இத்தாலி R 16 போகலை

2014 ல் ஸ்பெயின் R16 போகலை

2018 ல் ஜெர்மனி R16 போகலை!

சகாவே

‏அவ்வளவு பெரிய ஜெர்மனி வெளியே போயிருக்கும் இந்த அர்ஜ்ஜெண்டினா நாக் அவுட்ல வந்திருப்பது,எனக்கென்னவோ மெஸிக்கு தான் உலககோப்பை போல...

Shaun™

‏ஏன்டா ஜெர்மனி

நா என்னமோ உன்ன பெரிய ரௌடின்லடா நெனச்சேன்

innocent

‏Tournament ஆரம்பிக்குற முன்னாடி உங்களுக்கு மெஸ்ஸி இருக்கலாம் ரொனால்டோ இருக்கலாம் எங்களுக்கு தான் டீமா கெத்தா இருக்குனு சொன்னவனுகளா எங்க?'!   ஜெர்மனி ஃபேன்ஸ்!

அலப்பரை

‏காட்டுல எங்க ஆயா, காட்டுக்கு வா.. காட்டுக்கு வானு கூப்டுச்சு...

போயிட்டு நாளு வருஷம் கழிச்சு வாரேன் - ஜெர்மனி    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x