Published : 17 Feb 2018 04:18 PM
Last Updated : 17 Feb 2018 04:18 PM

நெட்டிசன் நோட்ஸ்: நாச்சியார் - பாலாவுக்குள்ள ஒரு பாலாஜி சக்திவேல்

இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'நாச்சியார்' படம் பற்றி நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

Sathishkumar Subramaniam

நீ.....ண்ட நாட்களுக்கு பிறகு இயல்பான ஒரு பாலா திரும்பி வந்திருக்கிறார். பிதாமகன் சூர்யா மரணத்துடன் காணாமல் போன அதே நெஞ்சிற்கு நெருக்கமான பாலா. சேதுவையும் பிதாமகனையும் பார்க்கையில் அள்ளி அணைத்து கதை சொன்ன பாலா.

சிம்பிளான கதை. காட்சியமைப்பிலும் நெகிழ்வு நேரங்களை காட்டி உருக வைப்பதிலும் மட்டுமே பாலா பிராண்ட். உறுத்தாத சிரிக்க வைக்கும் காமெடி. முக்கியமாக ஓ என கதறி கொண்டு ஒப்பாரி பாணியில் அழுகும் பெண்களும் கழுத்து சங்கை கடிக்கும் ஹீரோயிசமும் இல்லை.

ஜோ தெறிக்க விடுகிறார். ஜீ.வீ ஆச்சரியப்படுத்துகிறார். மற்ற காஸ்டிங்குகளும் கச்சிதம். உணர்வுகளை லேசாக சீண்டி பார்த்து அழுகை வரவைக்கும் சிறிது நேரம் நெஞ்சில் நிரம்பி நிற்கும் க்ளைமாக்ஸ்.

இது மாதிரியான பாலா படங்களை நூறு தடவை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப பார்ப்பேன்..

Arjun

#Nachiyaar  சின்ன ஸ்டோரி பாலாவின் சிறந்த திரைக்கதையுடன்

Joseph Akbar Vijay

‏தரமான கதைக்கும் சிறப்பான நடிப்பிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி..!!  

இடி

‏#Nachiyaar பாலாவோட பைனல் டச் மிஸ்ஸிங்... வொய்?

தமிழ் தலைமகன்

‏படத்துல சரியான சிச்சுவேசன்ல அந்த கெட்டவார்த்தை வருது                  

திமிரு பிடிச்சவன்

‏சூர்யா..lஎப்பேர்ப்பட்ட நடிப்பு சிங்கத்தை வீட்ல போட்டு பூட்டிவச்சிருகிங்க ப்ரோ... இது மாதிரி நல்ல கதையம்சம் உள்ள படமா நடிக்க வைங்க... #Nachiyaar

உளவாளி

‏நாச்சியார்..-பாலாவோட வழக்கமான படத்துல இடத்து மாறுபட்ட ஒரு நல்ல படைப்பு..அருமையான திரைக்கதை..டைட்டில் கார்ட்ல இருந்தே ராஜோவோட பிஜிஎம்..

 

Sabi

‏பாலாவுக்குள்ள ஒரு பாலாஜி சக்திவேல்

Vijay Rules

‏நாச்சியார்  வழக்கமான பாலா ஸ்டைல்ல படம் இல்லயாம் .... சந்தோசம் அப்ப தியேட்டருக்கு போய் படம் பாக்கலாம்..

Shankar Vinothan

‏பெண்ணியம் பேசும் படம்...

நல்ல கதைக்களம்...

ஒவ்வொரு காட்சி கோப்பும் அருமை...

பாலாவின் அருமையான படைப்பு..

குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய  படம்..

 

 

sulthan sps

‏கற்பழிக்கும் காம கொடூரனுக்கு தனது ஸ்டைலில் பாலா சார் கொடுக்கும் தண்டனை #நாச்சியார்

குழந்தை Talks

‏ஹாப்பி என்டிங்கே ஹாப்பி என்டிங்க கட் பண்றது தான்

Pandiyan‏

எல்லா மதத்தையும் போற போக்கில எள்ளல் பண்ற துணிச்சல் பாலாவுக்கு மட்டுமே சாத்தியம்

ரகுவரன்

‏வழக்கமான பாலா படம் இல்லை. அளவுக்கு அதிகமான வன்முறை, வக்கிரம் இல்லை. நல்ல சமூக கருத்தை சொல்லும் அழுத்தமான படம் #நாச்சியார்     

தி. லி. செல்லா

‏ஜி.வி. பிரகாஷ் , ஜோதிகா, புதுமுகம் இவானா நடிப்பு அருமை, தனது படைப்பில் மாறுபட்ட கதையில் சுபத்துடன் முடித்துள்ளார் பாலா

சித்ரா தேவி

‏பிதாமகன்-க்கு பிறகு நிறைவான படம்

எல்லா மதத்தையும் போற போக்கில எள்ளல் பண்ற துணிச்சல் பாலாவுக்கு மட்டுமே சாத்தியம்

ஜீவிபி நடிச்சிருக்கிற முதல் படம்

அப்பாவித்தனம் கண்ணுல மின்ற ஹீராயின் அவ்ளோ க்யூட்

ஒற்றை வயலின் இழையில் கண்கலங்க வைக்கும் ராஜா

Dr.Rockstar AK™

‏பாலா..யூ பியூட்டி..     தரமான,வித்யாசமான,ஜனரஞ்சகமான,எங்கேஜிங்கான,பாஸிட்டிவான,இன்வெஸ்டிகேஷன் ஜானர் பாலா படம்..பாலா படத்துக்கு இந்த Jargonsலாம் புதுசா இருக்குல்ல..? படமே அப்டிதான்..பாலா Stamp ரொம்ப சில இடத்துல தான் வருது..ஆனா அப்டி வர்றப்பலாம் செம அப்ளாஸ் தியேட்டர்ல..

ωσℓνєяιиє 

‏பாலா படங்களில் எப்பவும் நெகடிவ் பீலிங் இருக்கும்

நீளமான படமா இருக்கும்

க்ளைமாக்ஸ் கொடுரமாக இருக்கும்னு குறை சொல்லுவானுங்க

இப்படி இல்லாம Shortஆ, Positive end உடன்

#நாச்சியார் படம் எடுத்தா

இது பாலா படமே இல்லன்னு கூவுறானுங்க

அடேய் என்னத்தான்டா வேணும்

SPARTAN™

‏ஒன் டைம் வாட்சபிள்... முதல் பாதிய விட 2ஆம் பாதி நல்லாருக்கு...

உண்மையில் பாலாவின் புது முயற்சி..

#நாச்சியார்

Aguamenti

‏புது முக நடிகை #இவானா நல்ல தேர்வு.நல்ல நடிப்பு.ஜோ காக்கி உடையில் கச்சிதம்;மிளிரும் அழகு!.ஜீவி கன்வன்சிங் #நாச்சியார்

G e N i u $

‏போலிஸ் வேல பாத்தாலும் அவரசத்துக்கு நூறு ரூபாய் இல்லாத வறுமையான நிலையிலும் போலிஸ் இருக்கானுகனு ஒரு கண்ணோட்டத்த காட்டினார்

அலாவுதீன்

‏அதிகார வர்க்கத்தின் ஆணவ நரம்புகளை சிதைத்தெடுப்பவள்....

#நாச்சியார்      

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x