Published : 03 Jan 2018 12:25 PM
Last Updated : 03 Jan 2018 12:25 PM

எம்.எஸ்.பாஸ்கருக்கு புத்தாண்டில் ஆச்சரியம் அளித்த மகள்

நடிகர் நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகள் புத்தாண்டு தினத்தன்று அவரது தந்தைக்கு அளித்த பரிசு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சின்ன பாப்பா பெரிய பாப்பா தொலைக்காட்சித் தொடரில் ’பட்டாபி’ என்ற கதாப்பாத்திரம் மூலம் கவனிக்கப்பட்டவர் நடிகர் எம் . எஸ் பாஸ்கர். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் மொழி, பயணம், தெய்வ திருமகள், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடம் ஏற்று தனக்கான அடையாளத்தை தமிழ் திரைப்படத்துறையில் ஏற்படுத்தியிருக்கிறார்.

புத்தாண்டு தினத்தன்று நடிகர் எம். எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவில் தனது அப்பாவுக்கு புத்தாண்டை ஒட்டி புதிய ராயல் என்பீல்டு இரு சக்கர வாகனத்தை பரிசளிக்கிறார் ஐஸ்வர்யா.

மகளின் பரிசை எதிர்பாராத எம். எஸ் பாஸ்கர் அவரை கட்டியணைத்துக் கொள்கிறார். இந்த வீடியோவை இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

பலரும் எம் . எஸ் பாஸ்கர், அவரது மகளை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

 

வீடியோ

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x