Last Updated : 09 Jul, 2014 01:04 PM

 

Published : 09 Jul 2014 01:04 PM
Last Updated : 09 Jul 2014 01:04 PM

வலைப்பூ வாசம்: அறம் பாடியே ஆகவேண்டுமா?

வா.மணிகண்டன்
http:// www.nisaptham.com

இன்று ஊருக்குச் செல்ல வேண்டிய வேலையிருக் கிறது. இப்பொழுதெல்லாம் ஊருக்குச் செல்வதென்றால் சங்கட மாக இருக்கிறது. எங்கேயும் மழை இல்லை. நிலத்தடி நீரும் தாறு மாறாக இறங்கிவிட்டது. கர்நாடா காவில் ஜூலை பத்தாம் தேதி வரைக்கும் பார்த்துவிட்டு அப்படி யும் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை என்றால் போர்க்கால நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். என்ன செய்வார்கள்? வறட்சி நிவாரண நிதி வேண்டும் என்று மத்திய அரசிடம் தட்டு ஏந்துவார்கள். ‘எங்களுக்கே தண்ணீர் இல்லை’ என்று காவிரியின் குறுக்கே சம்மணமிட்டு அமர்வார்கள். மத்திய அரசிடமிருந்து வருகிற பணத்தில் மந்திரியிலிருந்து மணியகாரன் வரை பதவிக்குத் தகுந்தாற்போல நோட்டு களை உருவிக் கொண்டு மிச்ச மீதி சில்லறையை விவசாயி தட்டில் எறிவார்கள். மழையும் இல்லை பணமும் இல்லை. வடகர்நாடகாவி லும், வடகிழக்கு கர்நாடகாவிலும் விவ சாயிதான் கருகிக் கொண்டிருப்பான்.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பருவமழை இந்த வருடம் மும்பையிலும் ஏமாற்றிவிட்டது. மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து வறட்சிக்கு எதிரான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறதாம். இவர்கள் வகுத்துவிட்டாலும்....

முதல் முப்பது நாட்களில் மோடிக்கு முட்டை மதிப்பெண்தான் கொடுக்க வேண்டும். கண்டபடிக்கு விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். விலை ஏற்றுவது தவறு இல்லை- ஆனால் அதன் பாதிப்பு யாருக்கு இருக்கும்? ஆறாவது சம்பளக் கமிஷன், ஏழாவது சம்பளக் கமிஷன் என்று அரசு அதிகாரிகள் பாக்கெட்களை நிரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். கார்போரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் தொழிலதிபர்களும் தப்பித்துக் கொள்வார்கள். மாட்டிக் கொள்பவர்களெல்லாம் விவசாயிக ளும், சம்பள உயர்வே இல்லாத தனியார் நிறுவன ஊழியர்களும் தினக் கூலிகளும் இன்னபிற அன்றாடங் காய்ச்சிகளும்தான். என்னதான் கசப்பு மருந்து என்றாலும் மக்களுக் கும் தாங்கும் சக்தி ஓரளவுக்குத்தான். இல்லையா? ஏற்கெனவே விவசாயி களின் நிலைமை படுமோசமாகிக் கொண்டிருக்கிறது. இதில் மழை வேறு மண்ணை அள்ளி போட்டுவிட்டு போகிறது. இந்த தண்ணீர் பிரச்சினை இந்தியாவில் மட்டுமில்லை- வேறு பல நாடுகளிலும் இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் மாற்று வழியிலான விவசாயத்தை முயற்சிக்கிறார்கள். நாம் சொட்டு நீர் பாசனத்தையே கூட முழுமையாக அமல்படுத்தவில்லை. மற்ற முறைகளையெல்லாம் எங்கே அமல்படுத்தப் போகிறோம்?

இயற்கையும் குழி பறித்து, அரசாங் கமும் சாவடிக்கிறது- இப்படியே போனால் வேளாண்மை என்ன ஆகும் என்று யூகிக்க முடியவில்லை. விவசாய நிலத்தின் பரப்பு குறுகிக் கொண்டே வருகிறது. எந்த விவசாயியும் தன் மகன் விவசாயம் செய்யட்டும் என்று சொல்வதில்லை. மிச்சமிருக்கும் விவசாய நிலங்களி லும் ஆயிரம் சிக்கல்கள். விலை ஏறாமல் என்ன செய்யும்? அவரைக் காய் கிலோ எண்பது ரூபாய் என்பது இப்போதைக்குத்தான் ஆச்சரிய மான செய்தி. இன்னும் சில வருடங்களில் பல காய்கள் நமக்கு கிடைக்கப்போவதில்லை. எத்தனை ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத காய்கறிகள் என்று மிகப் பெரிய பட்டியலை நம் அடுத்த தலைமுறையிடம் சொல்வோம். நடக்கத்தான் போகிறது.

அமெரிக்காக்காரன் நிலத்துக்கு அடியில் மிகப்பெரிய சமுத்திரத்தை கண்டுபிடித்திருக்கிறானாம். பூமிக்கு மேலாக இருக்கும் நீரைக்காட்டிலும் மூன்றுமடங்கு தண்ணீர் இருக்கிறதாம். ஆனால் என்ன பிரச்சினை என்றால் கிட்டத்தட்ட ஏழுநூறு கிலோமீட்டருக்கு பூமிக்கு அடியில் தோண்ட வேண்டும். பூமியின் மையப்புள்ளியைத் தொடு வது மாதிரிதான். நூறு வருடங் களோ அல்லது இருநூறு வருடங் களோ-அதைக் கூட நம் ஆட்கள் தொட்டுவிடுவார்கள். ஆனால் இந்தப் பக்கம் இருந்து பூமியைக் குத்துகி றோம் என்று வையுங்கள். அந்தப்பக்க மாக இருந்து இன்னொருவன் குத்தி னால் இரண்டு ஓட்டைகளும் சந்தித் துக் கொள்ளாதா என்று இந்தச் செய்தி யைப் படித்ததிலிருந்து குழம்பிக் கொண்டிருக்கிறேன். என் சிற்றறிவுக்கு அப்படித்தான் யோசிக்கத் தோன்றுகிறது.

தமிழக அரசின் மழை நீர் சேகரிப்புத் திட்டம், பசுமைப் போர்வைத் திட்டமெல்லாம் நீண்டகால நோக்கி லான திட்டங்கள்தான். ஆனால் அதை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதில் தானே இருக்கிறது? மழைநீர் சேகரிப் புத்திட்டத்திற்கு பணத்தைக் கொடுத் தால் இரண்டு அல்லது மூன்று அடி குழியைத் தோண்டி கல்லை யும் மண்ணையும் போட்டு மூடிவிடு கிறார்கள். முதலமைச்சரின் பிறந்த நாளுக்காக லட்சக்கணக்கான செடி களை நட்டார்கள். அவையெல்லாம் தப்பித்திருந்தால் அருமையாக இருந் திருக்கும். எத்தனை சதவீதம் தப்பியி ருக்கும் என நினைக்கிறீர்கள்? மிகச் சொற்பம். அரசாங்கம் திட்டம் கொண்டுவருவதைவிடவும் முழுமை யாகச் செயல்படுத்துவதுதான் அவசி யம். முழுமையாக இல்லாவிட்டாலும் அறுபது சதவீதமாவது செயல்படுத் தினால் பரவாயில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x