Published : 02 Dec 2017 05:24 PM
Last Updated : 02 Dec 2017 05:24 PM

நெட்டிசன் நோட்ஸ்: திருட்டுப்பயலே 2 - சமூக (வலைதள) ஆபத்து

இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள 'திருட்டுப்பயலே 2' திரைப்படம் பற்றிய நெட்டிசன்கள் கருத்துகள் பதிவு செய்து வருகின்றனர்.அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிடன் நோட்ஸில்...

இசை

@Prasanna_actor யோவ் உனக்கு ஹீரோயிசத்த விட வில்லனிசம் தா நல்லா வருது ...

#திருட்டுபயலே2

மிரட்டியிருக்க மேன்

வாழ்த்துகள்

விஜய்

சிறப்பா இருக்கு பிரசன்னா நடிப்பு...அஞ்சாதேக்கு பிறகு பிரசன்னாவிற்கு ஒரு  நல்ல படம் #திருட்டுப்பயலே2

HBD Rockstar AK™

#திருட்டுபயலே2 அஞ்சு நிமிஷம் எக்ஸ்ட்ரா இழுத்துருந்தா தூங்கிருப்பேன்..

Ramnath‏

இங்க இருக்குர எல்லாம் என் Taste ல இருக்கு, நான் Already உன் வீட்ல வாழ்ந்துட்டு இருக்கன் பா....@Prasanna_actor extreme villanism, back with the bunch of performance. கொஞ்சம் சிரிங்க Sir. #Thiruttuppayale2 #ThiruttuPayale2 #திருட்டுப்பயலே2

Jsk Gopi

#திருட்டுபயலே2 இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் உள்ள அனைவரும் பார்த்து திருந்தி உணர வேண்டிய படம். வாழ்த்துக்கள் Director Susi Ganeshan sir.

காப்பி‏

ஒரு சீன்ல பாபிசிம்ஹா தன்னோட அம்மாட்ட "இந்த டெக்னாலஜி உசுர எடுக்குதும்மா"னு சொல்வார்.,

ஆம்,

ரகசியங்கள் ரகசியமா இருக்குற வரைக்கும்தான் நமக்கெல்லாம் நிம்மதியானா வாழ்க்கை..

#திருட்டுப்பயலே2...

பெல்லு

பிரசன்னா அசத்தி இருக்கிறார் #திருட்டுப்பயலே2

செல் முருகன்

அட அந்த ரயில்வே ஸ்டேஷன் சீன்ல ஜனங்க உங்கள அடிக்கும்போது ..அடடே நாம அங்க இருந்தா நாமளும் ரெண்டு சாத்து சாத்தலாமேன்னு வெறி வந்துச்சி பாஸ்... அந்தளவுக்கு பிரசன்னா அங்க தெரியல உங்க கேரட்டரோட கலந்துட்டீங்க.. \ கொஞ்சம் சிரிங்க பாஸ்

பிரனவன் ராமசந்திரன்

எந்த வித எதிர்பார்புமில்லாமல் போனதற்கு நல்ல நிறைவை தந்துள்ளது..  #திருட்டுபயலே2

சிலம்பரசன்

சமூக (வலைதள) ஆபத்து #திருட்டுப்பயலே2

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x