Published : 20 Dec 2017 16:37 pm

Updated : 20 Dec 2017 16:37 pm

 

Published : 20 Dec 2017 04:37 PM
Last Updated : 20 Dec 2017 04:37 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஜெ. சிகிச்சை வீடியோ- பத்திரமா பாத்துக்கோங்க!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல் வெளியிட்டார். இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

P Kathir Velu


நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருங்கள். உடம்பையும் உறவுகளையும் பத்திரமா வச்சுக்குங்க. அதிகாரத்தின் உச்சம் ஒன்று படுக்கையில் நோய்மையில் ஒரு குழந்தைபோல் குலைந்து கிடைப்பதைப் பார்க்க நோகுகிறது.

H Umar Farook

ஜெ., வீடியோ அதிகாரப்பூர்வமானது இல்லை: அப்பல்லோ. - சரி நீங்க வெளியிட வேண்டியது தானே ?

Banu Rękä T R

இப்பவும் அரசியல் ஆதாயத்துக்காக தானே இந்த வீடியோ வெளியீடு..?

Karuppusamy

ஜெ. மருத்துவமனையில் பழச்சாறு அருந்தும் வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. காது சவ்வு குறித்த கவலை உங்களுக்கு இருந்தால் இரண்டு நாட்களுக்கு செய்தி சேனல்கள் பக்கம் யாரும் போகாதீர்கள்.

Sathiya Rasu

ஜெ. அப்பல்லோவில் 2-வது மாடியில் இருந்ததாக சொன்னார்கள். அங்கே தென்னை மரம் இருக்கா?.. #நமக்கு மட்டும் ஏன் இப்படி தோணுது?

Mano Red

ஜூஸ் வீடியோ இருக்கட்டும். இட்லி சாப்பிட்ட வீடியோ வந்தால்தான் நம்புவோம்.

Arivazhagan Kaivalyam

அப்போலோ மருத்துவமனையின் வடிவமைப்பையும், அதன் அவசர மருத்துவப் பிரிவு அமைந்திருக்கும் இடத்தையும் அறிந்தவர்கள் இந்தக் காணொளி சில ஆண்டுகளுக்கு முன்பு வேறெங்கோ எடுக்கப்பட்டது என்பதை அறிவார்கள். சாளரங்கள் அற்ற முழுதும் அடைக்கப்பட்ட அப்போலோவின் ICU வின் பின்னணியில் தென்னை மரங்கள் எல்லாம் தெரிவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை.

இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு அறைகள் முற்றிலும் சுவர்கள் சூழப்பட்டவை, தவிர இந்தக் காணொளியில் இருக்கும் ஜெயாவின் முக அமைப்புக்கும், அவர் அப்போலோவுக்குள் செல்வதற்கு முன்பு ஊடகங்களில் காட்சியளித்த முக அமைப்புக்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கிறது.

பா. வெங்கடேசன்

தமிழக மக்கள் ஓராண்டாக எவ்வளவோ மன்றாடி ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட வீடியோவைக் கேட்டனர்.இவ்வளவு காலம் அதை வெளியிடாதவர்கள் தற்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெல்வதற்கு இதனை வெளியிடுகிறார்கள். தங்களின் வெற்றிக்காக ஜெ. சிகிச்சை வீடியோவை வெளியிடுபவர்கள் தங்களை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஜெ.வை ஏன் கொன்றிருக்கக் கூடாது?

Nelson Xavier

மருத்துவமனையில் ஜெ. உயிரோடு இருந்தார் என்பதை நிரூபிக்க அல்ல, கடந்த 25 ஆண்டுகால அதிமுக உண்மையில் யாரால் இயக்கப்பட்டது, இவ்வளவு காலம் யாரிடம் இருந்திருக்கிறது, இப்போதும் யார் கைகளில் இருக்கிறது என்பதை தொண்டர்களுக்கு சொல்ல முயல்கிறது இந்த வீடியோ!

உண்மையில் கட்சி அரசியல் என்பது போராடி அதிகாரத்திற்கு வருவதில்ல. அதிகாரத்தை எப்போதும் தன்வசமே வைத்திருப்பது.

Umanath Selvan

அம்மாவுடன் சின்னம்மா இல்லை. இது ஃபேக் வீடியோ என சொல்ல இது ஒரு காரணம் போதாதா?

Muhammed Mydeen

ஜெயலலிதா வீடியோ வெளியீடு- மிகவும் மோசமான அரசியல் யுக்தி...

ஜெயலலிதா மீது உண்மையிலேயே ஒரு பரிதாபம் தோன்றுகிறது. மக்கள் எப்போதும் கம்பீரமாகக் கண்ட ஒரு முதல்வரை இப்படி ஒரு கோலத்தில் பார்க்க மனம் வரவில்லை.

ஆனந்த்குமார் சித்தன்

இது போயஸ் தோட்டம் அல்லது கொடநாட்டில் உள் சிகிக்சையில் இருந்த வீடியோவாக மட்டுமே இருக்க வாய்ப்பு.. அப்பல்லோவுக்கு வரும் முன்பே இது எங்காவது எடுக்கப்பட்டு இருக்கலாம்.

Kadanganeriyaan Perumal

யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்...

Vini Sharpana

பொன் முட்டையிடும் வாத்தை யாரும் கொல்லவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். ஆரம்பத்திலிருந்தே சசிகலாவுக்கு சப்போர்ட் செய்ததற்கான காரணம் இதுதான். அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இடையில் சசிகலாவையே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்றார் தினகரன்.

அப்பல்லோ ரெட்டி சசிகலா சொல்வதைக் கேட்பாரா? அதிகார பலம், ஆட்சி பலம் கொண்ட மத்திய அரசின் பேச்சைக் கேட்பாரா? யாருக்கு செல்வாக்கு அதிகம்? ஜெ. மரணத்தில் பாஜகவையும் விசாரிக்க வேண்டும்.

Mohammed Khan

வீடியோ ரிலீஸ்...

இன்னும் ஒரு வாரத்துக்கு பூராப் பேரும் Forensic Scientists ஆ தான் அலைவாங்க.

Mugil Siva

ஒருவேளை முழு நீள வீடியோ தமிழ் ராக்கர்ஸில் வெளியாகுமோ?

Raj Mohan

இன்று வீடியோ வெளியிட்டது அரசியல்தான், ஆனால் தேர்தல் வீதிமீறல் இல்லையே.

மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS

வீடியோ க்ளியரா இல்லையாம், சவுண்ட் இல்லையாம்,ஜெ. வீடியோவை பார்க்கலையாம்..

அடப்பாவிகளா, அதுக்காக மருத்துவமனையில நோயாளியை வச்சு ஷூட்டிங்கா நடத்த முடியும்?

SKP Karuna @skpkaruna

தேர்தலுக்கு முந்தைய நாள் தனது துருப்புச் சீட்டை வெளியிடும் தினகரனின் சல்லித்தனம் கூட புரிகிறது.

ஜெ. பழரசம் அருந்தும் காட்சி தேர்தல் நடத்தை விதிமீறல் என தேர்தல் கமிஷன் கருதும் லாஜிக்தான் புரியமாட்டேங்குது? எந்த விதிப்படி இது தவறாகும்?

பால பாரதி

வீடியோ உண்மையா? இத்தனைநாள் கழித்து ஏன் வெளியிட்டார்கள்? பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? எப்படி இறந்தார் என தமிழிசை ஏன் கேட்கிறார்.?

ஆஸ்பத்திரி வரும்போதே அவருக்கு சுயநினைவு இல்லை என சிலநாட்களுக்கு முன்னால் அப்பல்லோ சொல்லவேண்டிய அவசியம் என்ன? இவர்தானே தீபாவளி கொண்டாட வீட்டுக்குக் கிளம்பலாம் என அறிவிப்பை அப்போது செய்தார்.

எங்களுக்கும் அதிமுகவுக்கும் சித்தாந்தரீதியாக ஒற்றுமை இருக்குனு பாஜக தலைவர் வெங்கைய்யா நாயுடு ஏன் கூறினார்?

மிகக் கேவலமானது தமிழ்நாட்டு அரசியல்தானா?

ஹைக்கூ காதலன் @BakkarSiddiq

"ஜெ. ஜெயலலிதா என்னும் நான் துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன் என்று என் கல்லறையில் எழுதுங்கள்! "

Lekha @yalisaisl

வெளியுலகத்துக்கு தன்னை எப்பவும் அழகா, நேர்த்தியா வெளிப்படுத்திக்க விரும்பியவர் ஜெயலலிதா. அரசியல் ஆதாயத்துக்காக அவரது பர்சனல் வீடியோக்களை வெளியிடுவது துளியளவும் அவருக்கும் அவர் மரணத்திற்கும் மதிப்பளிக்காத செயல். Feeling sorry for her!

sudha @itsjsudha

அம்மா பொது இடங்கள்ல வரும்போது அவங்க பாதம்கூட தெரியா.து இப்படி அலங்கோலமா வெளியிட எப்படி மனசு வந்தது...?

Gokul

தன் இறப்பை வைத்தே தன் கட்சிக்காரர்கள் பிற்காலத்தில் அரசியல் செய்வார்கள் என்று அவங்களே நினைத்து இருக்க மாட்டாங்க!

Srinivasan J

ஜெ. வீடியோ பக்கம் நம் கவனத்தைத் திசை திருப்பி விட்டு அங்கு ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா செய்வார்கள் என்று அவதானிக்கிறேன்!

குருபிரசாத் தண்டபாணி

அது அம்மாவோ இல்லையோ,

உண்மையோ பொய்யோ,

ஆனா, அதைப் பார்த்ததிலிருந்து ஓர் இனம்புரியா அழுத்தம் ஆழ்மனதில் நெருஞ்சி முள்ளாய்.

வாசுகி பாஸ்கர்

இதை நியாயமாக தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. வித்யாசாகர் ராவ் மேற்பார்வையில் அனைத்துமே சுமுகமாக நடப்பதாக நாம் நம்ப வைக்கப்பட்டோம். ஆதாரம் கேட்ட கலைஞரை கரித்துக் கொட்டினார்கள்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்ப, விமர்சிக்க பாஜவுக்கு எந்த தார்மீக பொறுப்பும் கிடையாது. எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தது உட்பட, வெங்கையா மேற்பார்வையில் அனைத்தும் நடப்பதாக சூழல் உருவாக்கப்பட்ட போது, எச்.ராஜாவும், தமிழிசையும் தினகரனை கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது?

Arul Ezhilan

ஜெயலலிதாவின் வீடியோவை தினகரன் அணியின் வெற்றிவேல் வெளியிட்டது முழுமையான கருத்துச் சுதந்திர வெளிப்பாடாகும். இது தேர்தல் விதிமுறைகளுக்கோ, அல்லது ஆறுமுகச்சாமி விசாரணைக் கமிஷனின் நடைமுறைகளிலே தலையிடுவதோ இல்லை.

இரா எட்வின்

அப்பல்லோவில் என்ன நடந்தது என்பதை அப்பல்லோ நிர்வாகம் இப்போதாவது வெளியிட வேண்டும். வெளியிட வைக்க வேண்டிய தனது பொறுப்பினை நீதித்துறை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author