Published : 27 Nov 2017 02:32 PM
Last Updated : 27 Nov 2017 02:32 PM

நெட்டிசன் நோட்ஸ்: ரகுவைக் கொன்றது எது?- அலட்சியமா, அதிகாரமா?

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி, இளைஞர் ரகு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் கோவையில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரி மோதி உயிரிழந்தார் என்று ஆளும் கட்சியினர் கூறிவரும் நிலையில், சமூக வலைதளங்களில் #WhoKilledRagu, #WhoKilledRaghuஎன்ற ஹேஷ் டேகுகளில், அரசை விமர்சித்துக் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Rti Thiyagarajan S P

சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள ஆக்சிஸ் வங்கி , கோகிலம் சிட்பண்ட்ஸ் வணிக வளாகம் மற்றும் ஜி பிளாஸ்ட் கம்பெனியின் சிசிடிவி வீடியோ பதிவுகளை அலசி ஆராய்ந்த பார்த்தால் அனைத்து உண்மைகளுக்கும் விடை கிடைக்கும்.

Senthil V

ரகுவைக் கொன்றது யார்? - கேள்வி எழுப்பும் கோவை மக்கள் ! இந்த ஏதேச்சதிகார அரசை ஆளவிட்டு வேடிக்கை பார்க்கும் நம்மால்தான் இந்த பலி.

Ezhilan M

அன்று முதல்வர் விழா, அரசுக்கு எதிராக அதே ஊரில் துண்டு சீட்டு விநியோகித்தார் என டிடிவி உட்பட பலர் மீது வழக்கு, சிலர் கைது என தமிழக அரசு ரியாக்ட் செய்தது.

இன்று முதல்வர் விழா, சட்ட வீதிமுறைக்கு மீறி அரசு செலவில் கட்சி விளம்பரத்தால், ஒருவர் பரிதாபமாக மரணம்.

முதல்வர் கைது ஆவாரா, குறைந்தபட்சம் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா?

Thamizhanda

ரகுவைக் கொன்றது யார்?- அரசியலா? அரசியல் கட்சியா? அதன் ஆடம்பரமா? அரசா? அரசின் அராஜகமா? அதிகாரமா? அதிகார அத்துமீறலா? அலட்சியமா? அல்லது நடு ரோட்டை மறைத்து பேனர் கட்ட வேண்டிய அவசியமா??

V.dilip Venkatesh

கோவை மக்களே நமக்கு தன்மானம் அதிகம். அதிமுகவின் கோட்டையாக விளங்கும் கோவை இனிமேல் எப்படி இருக்க வேண்டும் என்பது உங்கள் கையில்.

#WhoKilledRagu - உரிய அதிகாரிகள் பதிலளிக்கும் வரை, திரும்பத் திரும்பப் பகிர்ந்து வைரல் ஆக்குவோம்.

Ezhil

கொங்கு மண்டலம் தந்த அன்பிற்கு ஈடாக, அதிமுக அளித்த பதில் அன்பே - #WhoKilledRagu?

சாம் மகேந்திரன்

#WhoKilledRagu..?- Tamilnadu Government.

Nagaraja Chozhan MA

இணையத்தில் முட்டுக் கொடுக்கிறதுல சங்கிகள், உ.பி.க்கள்தான் கை தேர்ந்தவங்கன்னு நினைச்சேன். ஆனா அதிமுக ஐடி விங், அவர்களை விட பெரிய ஆளா இருப்பாங்க போல. லாரி வந்துச்சாம், பிரேக் போடலயாம், தண்ணி அடிச்சிருந்தாராம். ஆனா ரோட்டை மறச்சு பேனர் வச்சது மட்டும் கண்ணுக்குத் தெரில. #WhoKilledRaghu

Aboo Yoosuf

கைது செய்யக் காரணமாய் கந்து வட்டியோ, சமூகச் செயல்பாடோ, கார்டூனிஸ்டோதான் தேவை...

திராவிட இயக்கங்களின் பேனர் கலாச்சாரத்தில் இறந்தமைக்குக் கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்ன....?

Vinoth Kumar Manikandan

இறந்தவருக்கு விழாவா...? இறப்பதற்காக விழாவா..?

#whokilledraghu #coimbatoreraghu #NONEEDMGR100

Manoj Savarimuthuraj

#WhoKilledRaghu சுய விளம்பரத்துக்கும் விவிஐபி கலாச்சாரத்துக்கும் இனியாவது முற்றுப்புள்ளி வைப்போம்.

இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi

இன்னும் எத்தனை உயிர்களைக் கொல்லப் போகிறீர்கள்? #Whokilledragu

மனிதன் @Subhash_Offl

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது மட்டுமே இந்த அரசின் வேலை. அதுவும் மோசமான முறையில்!

Vicky AV @iamVickyAV

எதிரே வந்த லாரி மோதிதான் ரகு இறந்தார். அது சரி, எதிர்ல லாரி வரும்போது ஒதுங்கக்கூட இடம் இல்லாம கட்- அவுட் வைச்ச உத்தமர்களை என்ன பண்றது?

P Kathir Velu

கேள்விக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல், தேர்வையே ரத்து செய்யும் கயமைத்தனம் இதுதானோ!- அழிக்கப்பட்ட வாசகங்கள்.

Paul Samson J C @jcp_paul

இன்னும் அவினாசி சாலையில் ஆக்கிரமிப்பு செய்தும் அனுமதி பெறாமலும் பல பேனர்களும் அலங்கார வளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. #WhoKilledRagu

Vicky AV @iamVickyAV

சாலையில் கோவை மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல், ஆக்கிரமித்து எழுதப்பட்ட Who Killed Ragu வாசகம் ஒரே நாள் இரவில் அழிப்பு!

சிறப்பாக செயல்படும் தமிழக அரசு !

Ramya Sriram @ramyasriram79

கட் அவுட் கலாச்சாரம் ஒழிப்போம்.

Skycinemas @skycinemas

#WhoKilledRagu- மக்களாகிய நாம் அனைவரும்தான்... நடு ரோட்டுல பேனர் வச்சா தட்டி கேட்போம்.. அதுக்கப்புறம் யார் வைக்கறாங்கன்னு பார்ப்போம்...

Sujith Kumar @sujithkumar13

சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட 101 அனுமதியைப் பெற வேண்டும். ஆனால் பொதுமக்களைக் கொல்லும் முறைகேடான அலங்கார வளைவுகளை அமைக்க ஆளுங்கட்சிக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

Praveen Kumar @praveenkumar558

எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி நொண்டி அடிக்குது... சின்னம் ஹிந்தி படிக்குது. இதுல அவருக்கு நூற்றாண்டு விழாவா? #WhokilledRaghu

M Manikandan @puliangudi

#WhoKilledRaghu- ஆளுங்கட்சியைக் கேள்வி கேட்கத் திராணி இல்லாத நாம் ஒவ்வொருவரும்தான்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x