Last Updated : 22 Nov, 2017 09:50 AM

 

Published : 22 Nov 2017 09:50 AM
Last Updated : 22 Nov 2017 09:50 AM

இணைய களம்: மோடியும் பகுதி நேர அரசியல்வாதிதானே!

ரா

குல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்கப்போவது உறுதியாகிவிட்டது. டெல்லி ஊடகங்கள் இதுதொடர்பாக விவாதங்களை நடத்திவருகின்றன. பலரும் ராகுலை ‘பகுதி நேர அரசியல்வாதி’ என விமர்சிப்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு எதிர்க்கட்சித் தலைவரான ராகுலை ‘பகுதி நேர அரசியல்வாதி’ என்பது ஒருபுறம் இருக்கட்டும். அது தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவரும் ஒன்றுதான். என்னுடைய கேள்வி என்னவென்றால், மோடியை முன்னுதாரணமாக வைத்து ராகுலை ஒப்பிட முடியுமா? அப்படிப் பார்த்தால், ஒரு ஆட்சியாளராக மோடியும் பகுதி நேர அரசியல்வாதிதானே!

ஊடகங்களின் குரல் 1: நாடாளுமன்றத்தில் ராகுல் செயல்பாடு சிறப்பாய் இல்லை!

நம்முடைய குரல்: நாடாளுமன்றத்துக்கு வருவதைக் கூடுமானவரை தவிர்க்கும் பிரதமரை என்ன சொல்லப்போகிறீர்கள்? ஏன் அதுகுறித்துப் பேச மறுக்கிறீர்கள்?

ஊடகங்களின் குரல் 2: கட்சி ஊழியர்களுடன் ராகுல் இணக்கமாக நடந்துகொள்கிறாரா?

நம்முடைய குரல்: உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? பாஜகவின் உட்கட்சி ஜனநாயகம் எவ்வளவு நசுங்கிப்போய்விட்டது என்பதை பாஜகவினரே இன்று சொல்வார்களே!

ஊடகங்களின் குரல் 3: ஊடகங்களோடு ராகுல் உரையாடுகிறாரா?

நம்முடைய குரல்: நீங்கள் இந்த மூன்றரை ஆண்டுகளில் மோடியின் பிரஸ் மீட் பார்த்ததுண்டா?

அரசியல் வாரிசுகள் எளிதாக மேலே வந்துவிடு வது உண்மைதான் என்றாலும், அவர்கள் வரலாற் றுச் சுமையோடும் வருகிறார்கள். ராகுல் ஐந்து தலைமுறைகளின், நூறாண்டுகளின் அரசியல் / ஆட்சியதிகார சரி/ தவறுகள், வெற்றிகள்/ தோல்விகளோடு வருகிறார். அவரைச் சந்தித்தவர்கள் நிறையப் பேர், அவர் எதிரிலிருப்பவர்கள் பேசுவதை அனுமதித்து, அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்து, உள்வாங்கி அவர் பதில் அளிப்பதை ஒரு உயரிய குணமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘காதற்ற ஆட்சியாளர்கள்’ காலத்தில் இந்த ஒரு குணம் போதாதா ஊடகங்களே?

வரவேற்கிறோம்.. வாருங்கள் ராகுல். உங்கள் வரலாற்றுச் சுமை உங்களுக்கான சிலுவை. எங்களுக்கும் தெரியும், நீங்கள் சராசரி அரசியல்வாதியின் ‘ஜாலங்கள்’, ‘சாகசங்கள்’ கைவரப் பெற்றவர் அல்ல என்பது. ஆனால், இந்த ‘வித்தியாசம்’ தான் உங்கள் பலம். வாருங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x