Published : 09 Oct 2017 06:28 PM
Last Updated : 09 Oct 2017 06:28 PM

நெட்டிசன் நோட்ஸ்: டெங்கு காய்ச்சலும் மர்மக் காய்ச்சலும்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அதுகுறித்த நெட்டிசன்களின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

பா. வெங்கடேசன்

தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுகளின் முட்டைகளை அழிக்கும் பணி என்பது ஒரு தற்காலிகமான தீர்வே. டெங்குவுக்கு மட்டுமில்லை எந்தவொரு காய்ச்சலும் புறப்படுவது தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரிலும் சாக்கடையிலும் இருந்துதான். நம்முடைய தலையாய பணி மழைநீரும் சாக்கடையும் தேங்காத வகையில் வடிகால் அமைப்பதே. இதுவே டெங்குவை ஒழிக்கும் நிரந்தர தீர்வாக அமையும்.

வாசுகி பாஸ்கர்

டெங்குவால் உங்கள் உடல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்துதான் நீங்கள் எடுத்துக்கொள்ளும் வைத்தியமும் பலனளிக்கும். நீங்கள் செய்யவேண்டியது, மூன்று நாள் காய்ச்சல் தொடர்ந்தால் பரிசோதித்து மருத்துவமனையை நாடுவதே அறிவான செயலாகும். அரசு தொடர்ந்து வலியுறுத்தும் முன் எச்சரிக்கை, கைகொடுக்கும் சில டிப்சுகளை மட்டும் பாசிட்டிவாக எடுத்து கொண்டு இருந்து விடாதீர்கள், உடல் பிரச்சினையை சொல்ல தெரியா குழந்தைகளை தீவிரமாக கண்காணியுங்கள், சந்தேகமிருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

விஷ்வா விஸ்வநாத்

டெங்குவின் அறிகுறிகள் தோன்றின...

நிலவேம்பும், பப்பாளி இலைச் சாறுதான் அருந்தினேன். சுடுநீர் அருந்தினேன், ரசம் சாதம் உணவாக எடுத்துக்கொண்டேன், ரத்தத்தை பலப்படுத்த பீட்ரூட், கேரட் அதிகம் சேர்த்துக்கொண்டேன். பெரும்பாலான நேரம் வயிற்றை நன்கு காயப்போட்டேன். நன்கு ஓய்வெடுத்தேன். பூரண குணம் அடைந்தேன்.

Ravi Kumaran KG Kumaran

தற்போதைய சூழலில் டெங்கு பாதிப்புகள் பெரும் பீதியை ஏற்படுத்தினாலும் இதற்கு முழு காரணம் நாம்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டோம். நம்மில் எத்தனை பேர் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க அக்கறையுடன் பங்களித்துள்ளோம்? கழிவுகளையும் குப்பையும் அடுத்த வீட்டின் முன்பும் தெருவோரங்களிலும் வீசியெறிந்துவிட்டு கழிவு நீரை நம் வீட்டு எல்லை வரை வெளியேற்றி, பின் அது தேங்கிக் கிடந்தால் என்ன, நாற்றமெடுத்தால் என்ன, கொசு வாழ்ந்தால் என்ன. தனக்கென பாதிப்பு வரும்போதுதான் அரசை பார்த்து கூவுவோம்.

பிறகு எந்த அரசாக இருந்தாலும் வக்கற்ற செயலற்ற அரசு என்போம் தவறுகளில் 90 சதவீதத்தை நம்மீது வைத்துக்கொண்டு.

Hansa Hansa

ஆஸ்பத்திரி போற வரைக்கும் அது பேரு 'டெங்கு'. அங்க போனதும் அதன் பேரு, 'மர்மக்காய்ச்சல்'.

Lakshmi Saravanakumar

கொசு கடிப்பதால் டெங்கு பரவுவதில்லைன்னு தகவலைப் பரப்பரவங்கதான் இன்னிய தேதில எல்லோரை விட மோசமான அயோக்கியர்கள்.

ஷம்மி லூமா

சின்ன வெங்காயத்துடன் அச்சுவெல்லம் மென்று சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கூட, ரத்தத்தின் சிவப்பணுக்களும் அதிகரிக்கும். டெங்கு காய்ச்சலுக்கு இது நல்லது.

Sundaram Chinnusamy

தமிழ் நாட்டில் நல்ல மழை பெய்ததற்கு அரசுதான் காரணம் என்றால், டெங்கு காய்ச்சலுக்கு யார் காரணம்?

கண்ணன் சின்னராஜ்

ஜாதி, மதம், இனம், மொழி இதையெல்லாம் தாண்டி வருவது காதல் மட்டுமல்ல..

டெங்கு காய்ச்சலும்தான்!

#நில வேம்பு கசாயம் குடிக்கவும்!

M.m. Abdulla

ஒரு காலத்தில் பிளேக் நோய், அம்மை நோய் போன்றவை பரவி மக்கள் கொத்து கொத்தாக இறந்ததை எழுத்தில் மட்டுமே படித்து இருக்கிறோம். இன்று மாலை நிகழ்ந்த மரணத்தோடு எனது நெருங்கிய வட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த டெங்கு சாவின் எண்ணிக்கை 23. சுகாதாரத்துறை அமைச்சரின் ஊர்க்காரன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன்.

Jay Kumaar‏ @Jaykumaar

சாதாரண காய்ச்சல்னு மாத்திரை சாப்பிட்டு அசால்ட்டா இருந்ததால பிரண்டோட அம்மா இறந்துட்டாங்க. #காய்ச்சல் வந்தா அலட்சியம் வேண்டாம் ப்ளீஸ்.

NARAYANAN THIRUPATHY‏ @Narayanan3

பரவுவது டெங்கு மட்டுமல்ல மர்மக் காய்ச்சலும்தான்: டாக்டர் தமிழிசை.

தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும் அல்லது விலகிக் கொள்ள வேண்டும்.

யுகராஜேஸ் @yugarajesh2

முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும்னு நினைச்சுக்கிட்டு இருந்த நம்மை, கொசுவை ஒழிக்க வேண்டும்னு நினைக்க வச்சிடுச்சு இந்த டெங்கு.

கிரியேட்டிவ் ЯΛJ @CreativeTwitz

டெங்கு கொசுக்களை ஒழிக்க 100 டன் டயர்கள் அழிக்கப்பட்டுள்ளது - விஜயபாஸ்கர்.

// கண்ணாடிய திருப்புனா எப்டி பாஸ் ஆட்டோ ஓடும் //

மெத்த வீட்டான்‏ @HAJAMYDEENNKS

டெங்கு கொசுவை ஒழிப்பது முழுக்க அரசின் வேலை என நினைப்பது நம் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயல். சுற்றுப்புறத்தை நாமும் தூய்மையாக வைத்திருக்கணும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x