மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ அக்.15 - 23

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ அக்.15 - 23
Updated on: 
3 min read
மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் புதன்(வ), சுக்கிரன்(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் கேந்திர ஸ்தானங்கள் பலமாக அமைவதால் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

உறவினர்கள்- நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு போட்டிகள் குறையும். அரசியல்துறையினருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.

திருவோணம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன்(வ), சுக்கிரன்(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் சப்தம ஸ்தானத்தில் வரும் குரு, ராசியை பார்ப்பதால் நீண்ட நாட்களாக வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். காரிய தடங்கல்கள் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த இழுபறியான நிலை மாறும்.

புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிதாக வீடு, மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கவலைகள் அகலும். அரசியல்துறையினருக்கு உடைமைகளில் கவனம் தேவை. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

சதயம்: இந்த வாரம் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும், சிவனையும் வணங்கி சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

மீனம்:
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- ராசியில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன்(வ), சுக்கிரன்(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் கிரக சூழ்நிலை உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம்.

எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. தொழில் வியாபாரத்தில் பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். கலைத்துறையினருக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். அரசியல்துறையினர் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.

உத்திரட்டாதி: இந்த வாரம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

ரேவதி: இந்த வாரம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

பரிகாரம்: ருத்ர ஜெபம் செய்வதும் குருவுக்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ அக்.15 - 23
Call Me Chihiro: ‘அன்பென்னும் மழை’ சிஹிரோ | திரை தேவதைகள் 39

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in