

பலன்கள்: வாழ்க்கை துணையின் ஆதரவால் வெற்றிக் கனியை ருசிக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்கு தாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழி செய்யும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவப் பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும். கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும். வெளி நாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவ செலவுகள் குறையும். அரசியல் துறையினருக்கு கடந்த காலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும்.
சுவாதி: இந்த மாதம் தடைப்பட்ட சுப காரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலை தூரங்களில் இருந்தும் நல்ல செய்திகள் வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கு இடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழிபட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து கூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14 |
பலன்கள்: கணிவான வார்த்தைகளால் அனைவரையும் கவரும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும்.
குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு உங்கள் கவுரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது. அரசியல் துறையினருக்கு பணப் புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
அனுஷம்: இந்த மாதம் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப் படலாம்.
கேட்டை: இந்த மாதம் வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: காசி விசாலாட்சியை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரிய தடை நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 22, 23 | அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17 |
பலன்கள்: மனித நேயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்தி சாதுரியத்தை பயன்படுத்தி சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும். அரசியல் துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.
மூலம்: இந்த மாதம் தொழில் வியாபார போட்டிகள் குறையும். பண வரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் போது கவனம் தேவை.
பூராடம்: இந்த மாதம் அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. பண வரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை நெய் தீபம் ஏற்றி வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 24, 25 | அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19 |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.