கடகம், சிம்மம், கன்னி: செப்டம்பர் மாத பலன்கள்

கடகம், சிம்மம், கன்னி: செப்டம்பர் மாத பலன்கள்
Updated on
4 min read
கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணமுடைய கடக ராசியினரே நீங்கள் திடீரென்று உணர்ச்சி வசப்படக் கூடியவர். இந்த காலகட்டத்தில் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும்.

கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காரியங்களை சாதிப்பீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பூசம்: இந்த மாதம் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்ல முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள்.

ஆயில்யம்: இந்த மாதம் கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும் | சந்திராஷ்டம தினங்கள்: செப் 24, 25 | அதிர்ஷ்ட தினங்கள்: செப் 14, 15, 16 |

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் சூரியன், புதன், கேது - தனவாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: தானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிம்ம ராசியினரே இந்த காலகட்டம் என்பது உங்கள் வாழ்வில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும்.

கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வி யில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மகம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

பூரம்: இந்த மாதம் பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்துகொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குழப்பம் தீரும் | சந்திராஷ்டம தினங்கள்: செப் 26, 27, 28 | அதிர்ஷ்ட தினங்கள்: செப் 17, 18 |

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: மனதில் கொண்ட குறிக்கோளை அடையும் வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் கன்னி ராசியினரே நீங்கள் உங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டு அதில் வாழ்பவர். இந்த மாதம் சில சங்கடங்கள் நேரலாம். கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம். பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும்.

வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது. மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள்.

அஸ்தம்: இந்த மாதம் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: பைரவரை புதன்கிழமைதோறும் வணங்க திருமண தடை நீங்கும். செல்வம் சேரும் | சந்திராஷ்டம தினங்கள்: செப். 01, 02, 29, 30 | அதிர்ஷ்ட தினங்கள்: செப். 19, 20, 21 |

<div class="paragraphs"><p>இந்த மாதம் கிரகங்களின் நிலை</p></div>

இந்த மாதம் கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

கடகம், சிம்மம், கன்னி: செப்டம்பர் மாத பலன்கள்
Are You There God? It's Me, Margaret. - கடவுளை நோக்கிய மார்கரெட்டின் கேள்விகள் | திரை தேவதைகள் 33

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in