

மேஷம்: நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு. வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
ரிஷபம்: முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்கவும். மூத்தோர் அறிவுரை கேட்டு செயல்படுவது நல்லது. வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் வீண் அலைச்சல், டென்ஷன் விலகும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம்: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
சிம்மம்: நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை கண்டறிவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். லாபம் உண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்துக்காக சரக்குகளை கொள்முதல் செய்வீர்.
துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்களை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைதிறன் கூடும். ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: விருந்தினர் வருகை, மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று பரபரப்பாக இருப்பீர்கள். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். சக ஊழியரிடம் இணக்கமாக இருக்கவும்.
தனுசு: பணவரவு உண்டு. வீடு, வாகனத்தை மாற்றுவீர். தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக நடந்து கொள்வர். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றிகளை குவிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவரை குறை கூறாதீர்.
மகரம்: இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும். புதிய யுக்திகளை கையாண்டு எதிலும் வெற்றி காண்பீர்.
கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவார்கள். நண்பர்கள் உதவியுடன் வேலை கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்புகள் கூடும். வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.