

மேஷம்: பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளை களால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்.
ரிஷபம்: குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசுவீர். பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். தலைவலி, தூக்கமின்மை நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில்தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகி கொள்வது நல்லது.
மிதுனம்: திட்டமிட்ட பணிகளை போராடி முடிப்பீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பூர்வீக வீடு, மனை விற்பனையாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் நீண்ட இழுபறிக்குப் பின் வசூலாகும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் நிலை சீராக அமையும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதி மொழி தருவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் கூடும். பங்குதாரருடன் விவாதம் வேண்டாம். அலுவலக ரீதியான பயணம் திருப்தி தரும்.
சிம்மம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். புது வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: பிரபலங்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வரக்கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்கள் உதவிகரமாக நடப்பர். பங்குதாரர் அறிவுரை தருவார். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
துலாம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: பிற்பகல் 3.08 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் வரும். எந்த வேலையையும் முடிக்க முடியாமல் திணறுவீர். குடும்பத்தில் செலவுகள் வந்துபோகும். வியாபாரத்தில் எச்சரிக்கை அவசியம். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு. முன்கோபம் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி அளிக்காதீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். லாபம் காண்பீர்.
மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர்கள். அலுவலகத்தில் பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
கும்பம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் கூடும். நவீன சாதனங்கள் வாங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள்.
மீனம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். புதிய வீடு வாங்கதிட்டமிடுவீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலக மேலதிகாரியிடம் அனுசரித்துப் போகவும். பேச்சில் கவனம் அவசியம்.