Published : 24 Mar 2023 05:34 AM
Last Updated : 24 Mar 2023 05:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். பணவரவு ஓரளவு திருப்தி தரும்.

ரிஷபம்: திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினை சாதகமாக முடியும்.

மிதுனம்: சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். விஐபிகள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவீர்கள். பதவிகள் தேடி வரும். பணவரவு உண்டு. நீண்ட நாட்களாக சந்திக்காத நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கன்னி: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட போராட்டத்துக்குப் பின்பு முடியும். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்து கொண்டேயிருக்கும். வெளியூர் பயணம் நன்மையில் முடியும்.

துலாம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். மற்றவர் ரசனைக்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். மதிப்பு, மரியாதை கூடும். பிறருக்காக ஜாமீன் கையெழுத்திட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்: அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். கடன் பிரச்சினைகள் ஓயும். பிற மொழி பேசுபவர்கள் உதவுவார்கள். யாரிடத்திலும் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளால் அனுகூலம் உண்டு.

தனுசு: புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோசித புத்தியாலும் பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

மகரம்: உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வழக்கு சாதகமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வெளிவட்டாரங்களில் மதிக்கப்படுவீர்கள்.

கும்பம்: இடைவிடாது போராடி வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐபிகள் உதவுவார்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அமைதி காக்கவும்.

மீனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பழைய வாகனம் செலவு வைக்கும். வீடு பராமரிப்புப் பணிகள் தாமதமாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x