Published : 30 May 2024 05:19 AM
Last Updated : 30 May 2024 05:19 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

பொதுப்பலன்: வீட்டை புதுப்பிக்க, வாகனம் மாற்ற, முத்து, பவழம் வாங்க, அணைகட்ட, மதில் சுவர் அமைக்க, கிணறு, குளம் ஆழப்படுத்த, சாதுக்களின் ஆசிர்வாதம் பெறநல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவக்கிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.

மேஷம்: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். சகோதரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

ரிஷபம்: பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் உண்டு. எதார்த்தமான வார்த்தைகளால் சிலரை கவருவீர். பழைய கடனை பைசல் செல்வீர். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை குறித்து யோசிப்பீர்கள். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்றுமதத்தினரால் ஆதாயம் கிடைக்கும். புதிய பங்குதாரர்களுடன் சேர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

கடகம்: பழைய பிரச்சினைகள் குறித்து பேச வேண்டாம். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் யாரையும் குறை கூட வேண்டாம்.

சிம்மம்: திட்டமிட்டபடி வெளியூர் பயணம் அமையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகள் பொறுப்பாக நடப்பர். உதவி கேட்டு, நண்பர்கள், உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

கன்னி: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வந்து பேசுவர். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி பெறுவீர். வேற்றுமதத்தவர் உதவுவார். பழைய வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்பு கூடும்.

துலாம்: நீண்ட நாள் முயற்சிக்கு இப்போது பலன் கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

தனுசு: சவாலில் வெற்றி பெறுவீர். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் புதிய கிளை திறப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைத்து பொறுப்பு கூடும்.

மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பிள்ளைகளுக்கு காய்ச்சல், வயிற்று வலி வரக் கூடும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது. வியாபாரத்தில் திடீர் முடிவுகள் வேண்டாம். பங்குதாரர்களை கலந்தாலோசித்து செயல்படவும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இதுவரை இருந்துவந்த போட்டி குறையும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். பொறுப்பு கூடும்.

மீனம்: பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனத்தை மாற்றுவீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வீட்டை அலங்கரிப்பீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். அலுவலகத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x